பிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. ஆக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய இந்தியாவை தவிர்க்கிறார்கள் என்று பிரெஞ்சு பொருளாதார நிபுணர் கை சோர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியான அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கோண்டு வந்தார்.
ஆனால் தற்போது அவரின் கவனம் அரசியல் சார்ந்து செயல்படத் தொடங்கியுள்ளது. அவரின் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
முதலீட்டாளர்கள் அச்சம்
அரசின் இத்தகைய நடவடிக்கையால் உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சரி, இந்தியாவில் முதலீடு செய்வதில் அச்சம் கொள்கின்றனர். சர்வதேச அளவில் முக்கிய பொருளாதார நிபுணர்களாக கருதும் கை சோர்மன், ஆரம்பத்தில் இந்திய பொருளாதாரம் மேன்மையடையும், தொழில் துறையை மேம்படுத்தவும் சாதகமான நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்பவில்லை
பிரதமர் மோடி ஆரம்பத்தில் தேசிய அளவில் தொழில் முனைவோருக்கு ஒரு சந்தையை உருவாக்க ஆதரவு தந்தார். மேலும் ஊழல் ஒழிப்பு தொடர்பாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்கு உதாரணம் தான் மேக் இன் இந்தியா திட்டமும். ஆனால் தற்போது திடீரென்று அவரது கவனம் முழுவதும் விலகி அரசியல் நோக்கத்தில் செல்ல ஆரம்பித்துவிட்டது. அவரின் சில அரசியல் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது. இத்தகையதொரு சூழ்நிலையில் யாரும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்ப மாட்டார்கள்.
வீழ்ச்சி காணும்
மேலும் பிரதமர் மோடியின் அரசியல் சார்ந்தோ அல்லது குடியுரிமைச்சட்டம் சார்ந்தோ எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அவருடைய இந்த அதிரடியான நடவடிக்கையால், இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்திக்கும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றும் சோர்மேன் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்
ஒரு நாட்டின் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் மட்டுமே, அந்த நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும். ஆனால் தற்போது அது சிதைந்து வருகிறது. இது மிகக் கவலைக்குரிய விஷயம். இந்தியாவின் வளர்ச்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. உலகளாவிய முக்கிய பொருளாதார நிபுணர்கள் அனைவரும் தொடர்ந்து அனைவரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தான் இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவுக்கு அச்சுறுத்தல்
வளர்ந்து வரும் நாடுகளில் முன்னணியில் இருந்த நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, கடந்த செப்டம்பர் காலாண்டில் படு வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் முதலீடு குறைந்துள்ளது. நுகர்வும் குறைந்துள்ளது. கிராமப்புற வீடுகளிடையே நிதி அழுத்தத்தாலும், பலவீனமான வேலைவாய்ப்புகளாலும் உந்தப்பட்டாதாலும் பொருளாதாரம் மேலும் பலவீனமடைய இது காரணமாக அமைந்தது. இந்த நிலையில் இதுபோன்ற பல காரணிகள் வறுமைக்கு அச்சுறுத்தலாகவும் தற்போது மாறியுள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications