இந்தியாவில் வேகமாக வளரும் மின்சார கார்கள் சந்தை- பிரெஞ்சு நிறுவனத்துடன் களமிறங்கும் ப்ளூஸ்மார்ட்..
பெங்களூரு: பிரேஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரான், இந்தியாவில் மின்சார கார்களை மட்டுமே இயக்கும் பெங்களூருவை சேர்ந்த ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா முதலீட்டில் இயங்கிவரும் ப்ளூஸ்மார்ட் நிறுவனம் ஓலா, உபர்-க்கு போட்டியாக விளங்கி வருகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகன இயக்கத்தில் அதிகப்படியான லாபத்தை அளிக்கிறது, இதன் மூலம் டாக்சி சேவை பிரிவில் எலக்ட்ரிக் கார்கள் புதிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரான் இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் களமிறங்கியுள்ளது. இந்தியாவில் அதன் மின்சார வாகன சந்தையில் விற்பனையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ப்ளூஸ்மார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இரு நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தம் மூலம் 12 மாதங்களில் 4,000 சிட்ரான் e-C3 மின்சார கார்களை ப்ளூஸ்மார்ட் நிறுவனம் வாங்க உள்ளது. சிட்ரான் e-C3 மின்சார கார் சிட்ரானின் ICE C3 மாடலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தொடர்ந்து, முதல் கட்டமாக ப்ளூஸ்மார்ட்டின் பெங்களூரு EV சார்ஜிங் சூப்பர்ஹப்பில் இருந்து 125 e-C3 கார்களின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. சிட்ரான் e-C3 மின்சார கார்கள் முழுமையான எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும்.
இது 320 கிலோமீட்டர் ரேஞ்ச் கொடுக்கும் என கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் அடையும் வகையில் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதில் 29.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது, இந்த மாடல் ரூ. 12.47 லட்சத்திற்கு எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மேலும் 7 ஆண்டுகள்/1.40 லட்சம் கிலோமீட்டர் பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது. ப்ளூஸ்மார்ட் நிறுவனம் இப்போது சுமார் 7,000 மின்சார கார்களை இயக்கி வருகிறது.
இந்தியாவின் மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பதில் ப்ளூஸ்மார்ட் நிறுவனமும் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் 36 சார்ஜிங் சூப்பர்ஹப்களில் 4,400 மின்சார வாகன சார்ஜர்கள் உள்ளன.
கரியமில வாயு வெளியீட்டை பூஜ்யமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிட்ரான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் வெற்றிகரமாக மின்சார வாகன அமைப்பை முழுமையாக கட்டமைப்பதே நோக்கம் என்றும் ப்ளூஸ்மார்ட் நிறுவன துணை நிறுவனர் அன்மோல் ஜக்கி தெரிவித்துள்ளார்.
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications