சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கோதாரி இண்டஸ்ட்ரீயல் கார்ப்ரேஷன் லிமிடெட் (KICL) பிரான்ஸ் நாட்டின் Royer Group உடன் இணைந்து, ஃபேஷன் உலகின் சின்னமாகத் திகழும் Kickers என்ற ஷூ பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா முழுவதும் Kickers பிராண்ட் ஸ்டோர்கள் திறக்கப்பட உள்ளன. முதல் கடை சென்னையில் திறக்கப்படும் என்று நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஸ்டோர்களில் ஷூ மட்டுமின்றி, ஆடை மற்றும் ஆக்சஸரீஸ் உள்ளிட்ட Kickers பிராண்ட் தயாரிப்புகள் விற்கப்பட உள்ளது.

1970 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Kickers, உலகளவில் பிரபலமான ஷூ பிராண்டாக அறியப்படுகிறது. இது குடும்பங்கள் அனைத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வகையான ஷூக்களை வழங்கி வருகிறது.
இந்த ஒப்பந்தம் KICL மற்றும் இந்திய ஃபேஷன் ரீடைல் துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று KICL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜே ராஃபிக் அகமது தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பூடான், நேபாளம், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் Kickers பிராண்ட் தயாரிப்புகளை விற்பனை செய்ய KICL நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்திய ஃபேஷன் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டை, சீனா போல் காலணி தயாரிப்பிலும் ஏற்றுமதியிலும் முன்னோடியாக உயர்த்த வேண்டும் என்றும், அதிகப்படியான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் சிப்காட் பகுதியில் காலணி தொழிற் பூங்கா அமைப்பதாக அறிவித்தது.
தமிழ்நாடு தமிழ்நாட்டில் காலணிகள் ஏற்றுமதி ஹப் ஆக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன், சென்னையில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிப்காட் பகுதியில் காலணி தொழிற் பூங்கா உருவாக்கிய நிலையில் இன்று திட்டமிட்டபடி JR-One Kothari காலாணி தொழிற்சாலை திறக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் சிப்காட் பகுதியில் உருவாக்கப்பட்ட காலணி தொழிற் பூங்காவில் முதல் காலணி நிறுவனமாக ஜேஆர் ஒன் ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை அமைத்து, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் மற்றும் ஷூடவுன் ஃபுட்வேர் கோ ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் தான் இந்த ஜேஆர் ஒன் ஃபுட்வேர் நிறுவனம்.
ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் சுமார் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் காலணிகளைத் தயாரிக்கும் தொழிற் பூங்கா-வை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இந்தத் தொழிற்சாலை வேலைவாய்ப்புகளில் அதிகளவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என ஆரம்பம் முதல் கூறப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications