கிரெடிட் கார்டு அதிகமா யூஸ் பண்ணா.. வருமான வரி துறை நோட்டீஸ் வருமா?

அண்மைக்காலமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துவிட்டது. நாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என நினைக்கிறோம் அல்லது ஒரு அவசர செலவு ஏற்படுகிறது என்ற சமயத்தில் நம் கைகளில் பணம் இல்லாத போது நமக்கு உடனடியாக அந்த செலவிற்கான பணத்தை வழங்க கூடிய ஒரு கருவியாக கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன.

நாம் இப்போது செலவு செய்து விட்டு அடுத்த மாதம் நமக்கு ஊதியம் வரும்போது அதனை திரும்ப செலுத்துகிறோம். அந்த வகையில் கிரெடிட் கார்டுகள் பலருக்கும் மிகப் பயனுள்ளவையாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகின்றன.

கிரெடிட் கார்டு அதிகமா யூஸ் பண்ணா.. வருமான வரி துறை நோட்டீஸ் வருமா?

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் வருமான வரித் துறையின் கண்காணிப்பின் கீழ் வருவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். கிரெடிட் கார்டினை பயன்படுத்தி நீங்கள் அதிகபட்ச தொகையை பரிவர்த்தனை செய்யும் போது அது வருமான வரியின் கண்காணிப்பின் கீழ் செல்லும் என்கின்றனர். கிரெடிட் கார்டு நிறுவனம் வழங்கியுள்ள வரம்பை மீறி நீங்கள் கிரெடிட் கார்டில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது வருமான வரி சிக்கலில் கொண்டு போய் விடும்.

நிதி மோசடிகளை தவிர்க்கவும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுவதை தடுக்கவும் அதிகபட்ச பண பரிவர்த்தனையை வருமான வரித்துறை கண்காணிக்கிறது. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அவர்களது நிறுவன கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யாரேனும் அதிகபட்ச தொகையை பரிவர்த்தனை செய்திருந்தால் வருமான வரி துறையிடம் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்பவர்களின் விவரங்களை வங்கிகள் வருமான வரித்துறையிடம் வழங்கிவிடும். வருமான வரித்துறை அந்த தனி நபரின் மற்ற அனைத்து செலவினங்களையும் இந்த குறிப்பிட்ட பரிவர்த்தனைகளையும் உடனடியாக கண்காணிக்க தொடங்கும்.

எனவே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வரம்பினை மீறி அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இல்லை எனில் வருமான வரி நோட்டீசுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

நமது கிரெடிட் கார்டு விவரங்கள் அனைத்துமே நம்முடைய பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. நமது பான் எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே போதும். வருமானவரித்துறை இதுவரை நாம் மேற்கொண்ட அனைத்து பண பரிவர்த்தனைகளையும் எளிதாக கண்காணித்து விடும்.

அதுமட்டுமின்றி நீங்கள் அதிகபட்ச பண பரிமாற்றங்களை செய்து இருந்தால் அதனை வருமான வரி தாக்கலின் போது குறிப்பிட வேண்டும் இல்லை என்றால் வருமான வரித்துறை இந்த இரண்டு தகவல்களையும் ஒப்பிட்டு உங்களிடம் விசாரணை நடத்த நேரிடலாம்.

வங்கிகள் , நிதி நிறுவனங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் படிவம் 61ஏ மூலம் வருமான வரித் துறையினரிடம் அதிகபட்ச பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் கணக்கு குறித்த விவரங்களை அவ்வப்போது வழங்கி வருகின்றன என்பதால் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் வருமான வரி நோட்டீஸை தவிர்க்க தங்களுக்கு விதிக்கப்பட்ட வரம்பை மீறி கூடுதலாக செலவு செய்யக் கூடாது என்ற அறிவுரையை நிபுணர்கள் வழங்குகின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+