ஐடி துறையில் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சமீபத்திய காலமாகவே மெதுவான வளர்ச்சியே காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் ஐடி நிறுவனங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.
பல நிறுவனங்களும் ஏற்கனவே புதிய பணியமர்த்தலை நிறுத்தி வைத்துள்ளன. சம்பள குறைப்பு, ஆள்குறைப்பு என பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தற்போது ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களையும், பல மாதங்கள் கடந்தும் பணிக்கு அழைக்கவில்லை என்ற நிலை இருந்து வருகின்றது.
விப்ரோவில் தேர்வான மாணவர்
நடப்பு ஆண்டில் பட்டப்படிப்பினை முடித்த பட்டதாரி மாணவர் ஒருவர், விப்ரோவின் மூலம் பணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இவர் சம்பளமில்லாத இரண்டு மாத இண்டர்ஷிப்பினையும் செய்துள்ளார்.
எனினும் இந்த திட்டம் முடிவடைந்த நிலையில் வேலையில் எப்போது சேர வேண்டும் என்ற கேள்விக்கு மத்தியில், விப்ரோ நிறுவனம் தேர்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை ஒவ்வொரு கட்டமாக தேர்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
பிடெக் படித்து விட்டு கட்டுமான பணி
நான் பிடெக் (ரவி) படித்துள்ளேன். விப்ரோவிலும் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டேன். ஆனால் தற்போது ஒரு கட்டுமான தளத்தில் 300 ரூபாய் சம்பளத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறேன். இது என்ன நியாயம் என விரக்தியில் பேசியுள்ளார்.
மணி கண்ட்ரோலில் வெளியான அறிக்கையில், ரவி போன்ற ஏராளமானவர்களில் ரவியும் ஒருவர். அவர் மேலும் கல்விக்கடனையும் செலுத்த வேண்டிய நிலைக்கு கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
டெக் மகேந்திராவிலும் இதே நிலை
வேலைக்கான ஆஃபர் கிடைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரையில் வேலை கிடைக்கவில்லை என்று புலம்புகிறார் ரவி.
இதேபோன்ற நிலை தான் டெக் மகேந்திரா நிறுவனத்திலும் நிலவி வருகின்றது. டெக் மகேந்திராவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்ற பட்டதாரிகள், இன்னும் வேலையில் இணையவில்லை. தற்போதும் காத்துக் கொண்டுள்ளனர்.
ஏன் இந்த பிரச்சனை
ஐடி நிறுவனங்களின் இந்த தாமதமான நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ரெசசன் அச்சம் இருந்து வருகின்றது. இது இந்திய ஐடி துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ரவி போன்ற ஏராளமான மாணவர்களுக்கும் இதுபோன்ற நிலை இருந்து வருகின்றது.
குடும்பத்தினரே நம்பவில்லை
இது குறித்து ரவி தனக்கு வேலை கிடைத்ததை ஆரம்பத்தில் கூறியபோது தனது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது அது உண்மை தானா எனும் விதமாக சந்தேகமாக கேள்வி எழுப்புகின்றனர் என கவலையுடன் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications