Naukri என்பது ஒரு புகழ்பெற்ற வேலைவாய்ப்பு இணையதளம் ஆகும். இந்நிறுவனத்தின் ஜூன் மாத அறிக்கையின்படி, இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 11% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கணக்குப்பிரிவு (Accounting), காப்பீட்டு துறை (Insurance Sector) மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (AI/ML) துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், தொழில்நுட்பம் சாராத நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது இளம் தொழில்நுட்பவியலாளர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும் நௌக்ரி நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் தெரிவித்துள்ளார்.

நௌக்ரி நிறுவனத்தின் அறிக்கையின்படி, முன்னணி இந்திய நகரங்களில் கோயம்புத்தூர், புதிய வேலைவாய்ப்பு ஆட்கள் (freshers) ஆட்சேர்ப்பில் முக்கிய மையமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும், கோவையில் 24% வரை புதிய வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சமீப காலமாகவே தகவல் தொழில்நுட்ப (IT) துறையின் வேலைவாய்ப்பு மீண்டும் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்" என நௌக்ரி நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி (CBO) தெரிவித்துள்ளார்.
மேலும், காப்பீட்டு துறையில் (Insurance Sector) வேலைவாய்ப்பு கடந்த மாதத்தில் 32% அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஆட்சேர்ப்பு 59% வரை அதிகரித்துள்ளது. இது இளம் பட்டதாரிகள் மற்றும் முதன்முறையாக வேலை தேடுபவர்களுக்கு காப்பீட்டு துறையில் முக்கிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்பதை தெளிவாக காட்டுகிறது.
புனே, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய பணியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தியுள்ளதாக நௌக்ரி அறிக்கை கூறுகிறது. இதில் புனே நகரம் 32% வேலைவாய்ப்பு வளர்ச்சியுடன் முன்னிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து இந்திய நகரங்களிலும், ராய்ப்பூர் 22% வேலைவாய்ப்பு அதிகரிப்புடன் பணியமர்த்தலில் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அதேபோல் வங்கி மற்றும் நிதி துறையைச் சேர்ந்த Unicorn நிறுவனங்கள் (மூலதனம் ரூ. 8000 கோடிக்கு மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகள்) கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 30% அதிகமாக ஆட்சேர்ப்பு செய்துள்ளன. அதேபோல், கட்டிடக் கலை மற்றும் உள்துறை வடிவமைப்புத் துறை (Architecture & Interior Design) 2025 ஜூனில் ஆண்டு வளர்ச்சியில் 50% வேலைவாய்ப்பு உயர்வுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பிறகு, கணக்கியல் மற்றும் நிதி துறை (Accounting/Finance) 34% வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் இந்தத் துறையில் மொத்தம் 6,989 வேலைவாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல் மற்றும் பயணத் துறை 21% வளர்ச்சியுடன் 1,982 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பிறகு, BPO / ITES துறையில் 19% வேலைவாய்ப்பு உயர்வு பதிவாகியுள்ளது. BPO / ITES துறையில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு உயர்வுக்கு முக்கிய காரணம், ஜெய்ப்பூர் நகரத்தில் 64% மற்றும் பாரோடா நகரத்தில் 54% என்ற அளவில் வேலைவாய்ப்பு அதிகரித்ததுதான் என நௌக்ரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 முதல் 15 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை தேவை 15% உயர்ந்துள்ளது. மேலும், 16 ஆண்டுக்கும் அதிக அனுபவம் உள்ளவர்கள் மீதான தேவையும் 15% உயர்வு கண்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக ரியல் எஸ்டேட் (Real Estate) மற்றும் மருந்து / உயிர்த் தொழில்நுட்பத் துறைகள் குறிப்பிடப்படுகின்றன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications