இந்தியாவைப் பொறுத்தவரையில் IT தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளில் தொடர்ந்து அதிகரிப்பு காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் IT துறையில் நுழைந்து வருகின்றனர். அந்த வகையில் நாட்டில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, HCL, டெக் மகேந்திரா போன்ற பெரிய நிறுவனங்களில் சென்று பணி புரிய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. அப்படி நுழையும் நபர்களுக்கு தாங்கள் விரும்பிய சம்பளம் கிடைக்கிறதா?
ஊதிய இடைவெளி: இதுபோன்ற முன்னணி IT நிறுவனங்களில் நுழையும் போக்கு அனைவருக்கும் சாதகமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் புதிதாக பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கும், சீனியர் லெவல் அதிகாரிகளுக்கும் இடையே உள்ள ஊதிய இடைவெளி என்பது அதிகமாக உள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஎப்ஓ-வான மோகன்தாஸ் பாய், ஐடி துறையில் அதிகரித்து வரும் ஊதிய இடைவெளி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளை பார்க்கும்போது புதிதாக பணியில் சேரும் பிரஷர்களின் சம்பளம் அவ்வளவாக அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில் 5 வருடங்களில் சி-சூட் நிர்வாகிகளின் வருமானம் 50 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
"5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஐடி நிறுவனத்தின் சிஇஓ-வின் சம்பளத்தை யோசித்துப் பாருங்கள் இப்போதும் அவர்கள் வாங்கும் சம்பளத்தை பாருங்கள். தற்போது சிஇஓ-க்களின் சம்பளம் 50 முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் பிற ஊழியர்களின் சம்பளம் 20 முதல் 25 சதவீதம் வரை மட்டுமே உயர்ந்துள்ளது ", என்று மோகன்தாஸ் பாய் கூறியுள்ளார்.
பிரஷர்களின் சம்பளம் 13 ஆண்டுகளில் 15 சதவீதம் அதிகரிப்பு: கடந்த 13 ஆண்டுகளில் பிரஷர்களின் சம்பளம் இன்போசிஸ் நிறுவனத்தில் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மோகன்தாஸ்-இன் கூற்றுப்படி 2011-இல் ஆண்டுக்கு 3.25 லட்சம் சம்பாதித்த பிரஷர்கள்.. இப்போது அதாவது 2024-ஆம் ஆண்டில் ரூ. 3.50 முதல் 3.75 லட்சம் மட்டுமே பெறுகின்றனர். 13 ஆண்டுகளில் வெறும் 15 சதவீதம் மட்டுமே சம்பளம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். இது எப்படி நியாயம்? 2011-ஆம் ஆண்டில் CEO என்ன சம்பளம் வாங்கினார்? இப்போது CEO என்ன சம்பளம் வாங்குகிறார்? சம்பளம் வழங்குவது எனது நியாயமாக இருக்க வேண்டும் என்று தனது கேள்வியை முன்வைத்தார்.


Click it and Unblock the Notifications