தங்களை சுற்றி கடினமான சூழ்நிலைகள் இருந்த போதிலும் அவற்றையெல்லாம் கடந்து வந்து சாதித்த பெண்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு பெண் தான் ரஜினி பெக்டர். Mrs. Bector Food Specialty Limited நிறுவனத்தின் உரிமையாளர் . வெறும் 20,000 ரூபாயில் தொழில் தொடங்கி தற்போது 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக அதனை உயர்ந்திருக்கிறார் ரஜினி பெக்டார்.
தற்போது பாகிஸ்தானில் இருக்கக்கூடிய கராச்சி பகுதியில் 1940-ஆம் ஆண்டு பிறந்தவர் இவர். குழந்தை பருவத்தில் இவர் லாகூரில் வசித்து வந்தார். 1947-ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இவரது வாழ்க்கை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. அப்போது பாகிஸ்தானில் இருந்த ரஜினி பெக்டாரின் குடும்பம் அங்கிருந்து வெளியேறி இந்தியாவிற்கு வந்தது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரையிலான தங்களது பயணம் எவ்வளவு சவால்கள் நிறைந்ததாக இருந்தது என ரஜினி பெக்டாரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பதான்கோடி பகுதியில் ஒரு மரத்தின் அடியில் ஏழு நாட்களாக இவரது குடும்பம் ரயிலுக்காக காத்திருந்தார்களாம். பயணிகள் ரயில் வராத நிலையில் சரக்கு ரயிலில் ஏறி இந்தியாவிற்குள் வந்துள்ளனர். அப்படி வரும் வழியில் நூற்றுக்கணக்கான மனித உடல்களை பார்த்து தான் பயந்ததாக கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தடைந்த ரஜினி பெக்டாரின் குடும்பத்திற்கு அங்கு இருந்த மக்கள் உணவு வழங்கி உபசரித்துள்ளனர். பின்னர் அவர்களது குடும்பம் பஞ்சாபிலேயே செட்டில் ஆகிவிட்டது.
1957ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் ரஜினிக்கு தரம்வீர் என்பவருடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தன்னுடைய கணவரின் ஊக்கத்தோடு 20,000 ரூபாய் முதலீட்டில் 1978-ஆம் ஆண்டு சிறியதாக ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தை தொடங்கினார். இதன்பெயர் கிரீமிகா. அந்த காலகட்டத்தில் புகழ்பெற்ற குவாலிட்டி ஐஸ்கிரீம் நிறுவனத்தை விட இவரது கிரீம்கா நிறுவனத்தின் ஐஸ்கிரீம்கள் பெருமளவில் விற்பனையாகின. இதனை அடுத்து ரஜினி பிரட் மற்றும் பிஸ்கட் வணிகத்திலும் ஈடுபட தொடங்கினார்.
1985 ஆம் ஆண்டு தன்னுடைய நிறுவனத்தை தனியார் நிறுவனமாக பதிவு செய்து கொண்டார். இதனை அடுத்து 1990-களில் அவரது மகனும் சேர்ந்து தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். இப்படி தான் இவர்கள் முதன்முறையாக 1991-ஆம் ஆண்டில் தங்களது மிகப்பெரிய பிஸ்கட் உற்பத்தி ஆலையை நிறுவினார்கள். பின்னர் மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம், குயிக்கர் ஓட்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் என பல்வேறு நிறுவனங்களுடன் கிரீமிகா நிறுவனம் வளர தொடங்கியது.
2006-ஆம் ஆண்டு உலகில் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சச்ஸ் நிறுவனம் கிரீமிகாவில் முதலீடு செய்தது. 2020 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்தது. தற்போது இந்திய பங்குச் சந்தையின் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 8,339.73 கோடி ஆகும். 2020இல் 762 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் விற்பனை வருவாய் தற்போது 1400 கோடி என வளர்ந்திருக்கிறது. ஜூலை 12ஆம் தேதி பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1,414 என்ற அளவில் வர்த்தகமானது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications