பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புரிந்து கொள்வதில் முக்கிய அளவீடாக பார்க்கப்படுகிறது Per Capita Income எனப்படும் தனிநபர் வருமானம். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் தனிநபர் வருமானம் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. அது பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு தனிநபர் வருமானம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தனிநபர் வருமானம் என்பது ஒரு நாட்டில் ஒரு தனிநபர் சம்பாதித்த பணத்தின் அளவை குறிப்பதுதான் தனிநபர் வருமானம். பொதுவாக நாட்டின் வருமானத்தை அதன் மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் இது கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த வருமானத்தில் ஆண், பெண் மற்றும் குழந்தை என ஒவ்வொருவரின் எண்ணிக்கையும் அடங்கும். ஒரு நாட்டில் தனிநபர் வருமானம் என்பது அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாக இருக்கிறது.

தனிநபர் வருமானத்தை கணக்கீடு செய்வதில் கிடைக்கும் முக்கியமான நன்மை ஒரு நாட்டின் மக்கள் செல்வ வளத்துடன் இருக்கிறார்களா, அத்தியாவசிய சேவைகள் கிடைக்கிறதா, போதிய வருமானம் கொண்டுள்ளார்களா என்பன உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இன்வெஸ்டோபீடியா தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் உலக அளவில் தனிநபர் வருமானத்தின் அளவு 17,500 டாலர்கள். 8 பில்லியன் மக்கள் தொகைக்கு இது கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்படி எனில் மொத்த உலக ஜிடிபி 139 ட்ரில்லியன் டாலர்கள்.
இந்தியாவில் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தான் தனிநபர் வருமான கணக்கீட்டினை வெளியிடுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 249 ரூபாய் ஆகும். மேக்ரோ டிரெண்ட்ஸ் என்ற தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் 1960 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் என்பது 83 அமெரிக்க டாலர்களாக இருந்தது. அன்றைய தேதியில் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 4.76 ரூபாய்க்கு சமம் ஆகும். அதாவது 1960இல் தனிநபர் வருமானம் 395 ரூபாய்.
இதுவே 20 ஆண்டுகளில் 1980 ஆம் ஆண்டில் 267 டாலர்கள் அன்றைய டாலர் மதிப்பு நிலவரப்படி இந்தியா ரூபாய்க்கு மாற்றினால் 1,765 ரூபாய் ஆகும். 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனிநபர் வருமானம் 19,585 ரூபாய் என உயர்ந்தது. 2007ஆம் ஆண்டில் முதன்முறையாக 50,454 ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியது. 2024 ஆம் ஆண்டில் 2730 அமெரிக்க டாலர்கள் அதாவது 2.23 லட்சம் ரூபாய் என்ற அளவில் நீடிக்கிறது.
சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் தனிநபர் வருமானம் கடுமையான சரிவை சந்தித்த ஆண்டு 1966 ஆகும். அப்போது தனிநபர் வருமானம் 24 சதவிகிதம் மைனஸிலிருந்து. 675 ரூபாய் தான் தனிநபர் வருமானம். இதனை அடுத்து 1975, 1984 ,1991, 2009 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் வருமானம் கணிசமான சரிவை கண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை கடந்த 2007 ஆம் ஆண்டில் தான் அதிகபட்சமாக தனிநபர் வருமானம் 27.52% உயர்ந்துள்ளது. வெறும் 249 ரூபாயில் இருந்த தனிநபர் வருமானம் 7 தசாப்தங்களில் 2.23 லட்சம் ரூபாய் என பல மடங்கு அதிகரித்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications