இந்தியாவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக UPSC தேர்வுகள் கருதப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களின் கதைகள் மற்றவர்களுக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அத்தகைய ஒரு கதை ஹரியானாவைச் சேர்ந்த விஜய் வர்தனின் கதை. ஏனென்றால் விஜய் வர்தன் தொடர்ந்து 35 முறை அரசாங்க தேர்வுகளில் தோல்வி அடைந்து, அதன் பிறகு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர் எப்படி கஷ்டப்பட்டு உழைத்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஒரு அரசு வேலைக்கான தேர்வில் கூட வெற்றி பெற முடியாமல் இருந்த விஜய் வர்தன், 35 முறை தேர்வுகளில் தோல்வியடைந்த பிறகு UPSC தேர்வில் வெற்றி பெற்றார். தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானது அல்ல, வெற்றியின் ஒரு பகுதியே என்பதற்கு விஜய் வர்தன் ஒரு சிறந்த உதாரணம்.

ஹரியானாவின் சிரசாவில் வளர்ந்த விஜய் வர்தன், ஹிசாரில் உள்ள கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அதன்பிறகு, UPSC தேர்வுக்கு தயாராவதற்காக டெல்லி சென்றார். ஆனால் அதிர்ஷ்டம் அவருக்கு சாதகமாக அமையவில்லை. 35 முறை முயற்சித்தும், ஹரியானா PCS, UPPSC, SSC மற்றும் CGL உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் அவர் முயற்சியை கைவிடவே இல்லை.
இறுதியாக, 2018-ஆம் ஆண்டு, விஜய் வர்தன் பலமுறை முயற்சித்த பிறகு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் UPSC தேர்வில் அகில இந்திய தரவரிசையில் (AIR) 104-வது இடத்தைப் பெற்று IPS ஆனார். விஜய் வர்தன் தனது IPS பதவியில் அதிருப்தி அடைந்ததால், மேலும் அவர் மீண்டும் UPSC தேர்வில் கலந்து கொண்டு 2021-ஆம் ஆண்டில் IAS ஆனார்.
உலகின் கடினமான தேர்வில் 1 முறை அல்ல 2 முறை வெற்றி பெற்றுள்ளார். ஒரு நேர்காணலில், விஜய் வர்தன் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களிடம் தங்கள் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் தோல்விகளால் மனம் சோர்வடையாமல், தனது தவறுகளில் இருந்து விஜய் வர்தன் பாடம் கற்றார். ஒவ்வொரு முறையும் அரசாங்க தேர்வுகளில் தோல்வி அடைந்த பிறகு தான் என்ன தவறு செய்தேன் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
அதன் பிறகு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளார். எனவே இதே நிலைமையை எதிர்கொள்ளும் அனைத்து யூபிஎஸ்சி தேர்வர்களுக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு. உங்களையும் உங்கள் கனவுகளையும் நம்ப முயற்சி செய்யுங்கள்.
விஜய் வர்தனின் வாழ்க்கைப் பயணம், தோல்வியை வெற்றியின் படிக்கல்லாக மாற்றியதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அவரது உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் முயற்சிகள், பலருக்கு உத்வேகமாகவும், தன்னம்பிக்கையை வளர்க்கும் உதாரணமாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications