சென்னை: இந்தியாவின் முக்கியமான பி2பி இணையதளமாக இருக்கிறது இந்தியாமார்ட். மொத்தமாக பொருட்களை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்த தளம் பெருமளவில் உதவியாக இருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பவர் தினேஷ் அகர்வால்.
அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பி இந்தியா மார்ட் எனும் நிறுவனத்தை உருவாக்கினார் தினேஷ் அகர்வால். 1995 ஆம் ஆண்டு தினேஷ் அகர்வால் அமெரிக்காவில் ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நல்ல சம்பளம், அமெரிக்காவில் வேலை இப்படி ஒரு வாய்ப்பை யாரும் தவற விட மாட்டார்கள். ஆனால் தினேஷ் அகர்வால் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு தாயகத்துக்கு திரும்பினார். அப்படி தாயகம் திரும்பிய அவர் 40 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கியது தான் இந்தியா மார்ட் நிறுவனம்.
தினேஷ் அகர்வால் தன்னுடைய சகோதரர் பிரஜேஷ் அகர்வாலுடன் இணைந்து 1996ஆம் ஆண்டில் இந்தியா மார்ட் நிறுவனத்தை உருவாக்கினார். இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதியாளர்களை உலக சந்தையுடன் இணைப்பது தான் இவர்களது நோக்கமாக இருந்தது.
தற்போது இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் பி2பி மார்க்கெட் தளமாக இந்தியா மார்ட் தளம் செயல்படுகிறது. 1997 முதல் 2001 ஆம் ஆண்டு வரை இந்தியாமார்ட் தளத்தின் பக்கத்தில் ஏற்றுமதியாளர்கள் இலவசமாக தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கான ஆன்லைன் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது இந்தியா மார்ட் தளம்.
2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச அளவிலான பொருளாதார மந்த நிலை இந்தியா மார்ட் நிறுவனத்தின் நிலைமையும் தலைகீழாக்கியது. எனவே இந்த நிறுவனம் சர்வதேச சந்தையிலிருந்து உள்நாட்டு சந்தை நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பியது. இப்படித்தான் இந்தியா மார்ட் நிறுவனம் இந்தியாவிற்குள் தொழில் புரிபவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தது. இந்த உள்நாட்டு b2b தளத்தை உருவாக்கியதன் மூலம் இந்த நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. இந்த நிறுவனம் 52 வாரங்களிலேயே 52 புதிய அலுவலகங்களை திறந்தது.
இந்தியாவின் பல்வேறு வியாபாரிகளுக்கும் இந்த தளம், பெரிய அளவிலான தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. தற்போது தினேஷ் அகர்வாலின் சொத்து மதிப்பு 5000 கோடி ரூபாய் ஆகும் இந்தியா மார்ட் நிறுவனத்தின் மதிப்பு 18,765 கோடி ரூபாய் ஆகும். அதுமட்டுமின்றி தினேஷ் அகர்வால் தற்போது 45 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications