மும்பை: நமக்கு பிடித்த வேலையை விடாமுயற்சியுடன் செய்யும்போது அது நம்மை பல உயரங்களுக்கு அழைத்து செல்லும். அப்படி ஒரு நபரின் வெற்றி கதை தான் இது. போஜ்ராஜ் நவானி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். நவானிக்கு சிறுவயது முதலே ஆடை வடிவமைப்பில் அதிக ஆர்வம் உண்டு, இவர் நண்பர்களுக்கு எல்லாம் இவர்தான் ஆடைகளை தேர்ந்தெடுத்து கொடுப்பாராம்.
அதேபோல வடிவமைப்பு, படம் வரைதல் ஆகியவற்றிலும் இவருக்கு ஆர்வம் இருந்தது. தன்னுடைய 23 வயதில் கல்லூரி படிப்பை முடித்த இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் 1995 ஆம் ஆண்டு "சாரி மேடம்" என்ற பெயரில் ஆண்களுக்கான ஒரு பிரத்தியேக ஆடை கடையை நிறுவினார். உள்ளூரில் அந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனவே தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் மும்பைக்கு பயணம் செய்துள்ளார். 2003 ஆம் ஆண்டு மும்பைக்கு சென்ற இவர் அங்கே ஃபேஷன் இண்டஸ்ட்ரியில் பலருடன் பணியாற்றி அனுபவத்தை பெற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று நோஸ்ட்ரம் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் (Nostrum Fashion Pvt Ltd ) என்ற பெயரில் ஆண்களுக்கான ஆடை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்திற்கான லோகோ, ஆடைகள் உள்ளிட்ட அனைத்தையும் இவரே வடிவமைப்பு செய்தார். படிப்படியாக நிறுவனம் விரிவடைய தொடங்கியது. 2007 ஆம் ஆண்டு இவருடைய நிறுவனம் லைக்ரா ஜீன்ஸ்களை அறிமுகம் செய்தது. இதுதான் இவர்களின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.
தற்போது நோஸ்ட்ரம் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆடை கடைகளை நடத்தி வருகிறது. ஆண்களுக்கான ஜீன்ஸ்கள், ஜாக்கெட்டுகள், டீ சர்ட்டுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக இவர்களது ஜீன்ஸ் பேண்ட்டுகள் 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது டி-ஷர்ட்டுகள் சுமார் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
நவானிக்கு உறுதுணையாக குடும்பத்தினரும் தொழிலில் உதவி புரிகின்றனர். இவர்களுடைய நிறுவனத்தில் யூனிக் செல்லின் பாய்ண்ட் இவர்கள் விற்பனை செய்யும் ஜீன்ஸ் பேண்ட் தான். இந்தியாவின் ஆடை உற்பத்தி கூட்டமைப்பு நடத்திய விழாவில் அனைவருக்கும் பிடித்த பிராண்ட் என்ற விருது நாஸ்ட்ரமுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கூட இவர் வடிவமைத்த ஆடைகளை அணிகின்றனர். தற்போது இ-காமர்ஸ் பிரிவிலும் இவர்கள் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது.
இவருக்கு சொந்தமாக மும்பையில் அலுவலகம் அமைந்திருக்கிறது. தற்போது 250 பேர் இவரிடம் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 20% பேர் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்தே பணி புரிகின்றனர். இந்நிறுவனம் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. 1500 மல்டி பிராண்ட் கடைகளில் இந்நிறுவன ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் நிறுவன வருமானம் 500 கோடி ரூபாய்க்கு உயரும் என நவானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications