இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் கூடிய விரைவில் கையெழுத்தாக இருக்கிறது. இது இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தான், இதன் பின்னர் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்த பிறகு தான் இருதரப்புக்கும் இடையிலான முழுமையான ஒப்பந்தம் என்பது கையெழுத்தாகி நடைமுறைக்கு வரும்.
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 50% வரி விதிப்பில் இருந்து பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுடன் கையெழுத்தாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த முதல் கட்ட ஒப்பந்தத்தில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கூட்டறிக்கை தொடர்பாக மத்திய வணிக துறை அமைச்சர் பியுஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தந்தார்.

அதில் விவசாயிகளின் நலன்களை பாதுகாத்து தான் இந்த உடன்பாடே எட்டப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். நாடு முழுவதுமே இரு தரப்புக்கும் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது எனக் கூறியிருக்கும் அவர் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவிற்கு குறைந்த அளவிலான 18 சதவீத வரி என்று நிர்ணயம் செய்திருக்கிறது அமெரிக்கா என சுட்டிக்காட்டி இருக்கிறார். கூடிய விரைவில் இந்தியாவின் பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்காவில் பூஜ்ஜியவரி என்ற நிலை வரப்போகிறது என கூறி இருக்கிறார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரியில் அமெரிக்கா என்ற பெரிய சந்தை வாய்ப்பு கிடைக்க போகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். காபி, பாதாம் ,தேயிலை , தேங்காய் மற்றும் மசாலா போன்ற வேளாண் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கூடிய விரைவில் அமெரிக்க சந்தையில் பூஜ்ஜிய வரி என்ற நிலை வரப்போகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு என்பது மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக கூறி இருக்கிறார்.
அமெரிக்க சந்தையில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடிய விமான பாகங்கள் ,இயந்திரங்களின் பாகங்கள் , பொது மருந்துகள் , மருந்து பொருட்கள், வைரம் மற்றும் நவரத்தினங்கள் ஆகியவற்றுக்கு வரியே இல்லை என்ற நிலை வர போகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பேக்கரி பொருட்கள் கொக்கோ பொருட்கள், பிராசஸ் செய்யப்பட்ட பழங்கள் , ஜாம் , ஜூஸ் ஆகியவற்றுக்கும் வரி இருக்காது என்கிறார்.

இந்தியா அமெரிக்கா இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த விவசாயிகளுக்கோ , சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கோ அல்லது பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கோ எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது அவர்களின் நலனை நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த துணிமணி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் , தோல் பொருள் உற்பத்தியாளர்கள் , பொம்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யக்கூடியவர்கள் இந்த வர்த்தக ஒப்பந்த மூலம் பெரிய அளவில் பலன் அடைவார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்க சந்தையில் இந்தியாவின் பட்டு பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி என அவர் அறிவித்தார்.
வர்த்தக ஒப்பந்தத்திற்காக ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா நிறுத்துகிறதா என்ற கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்திருக்கும் பியூஷ் கோயல் இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் பதிலளிப்பார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவை சேர்ந்த 45 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் வரியே இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு ,மகாராஷ்டிரா ,குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கடல் சார்ந்த உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய ஏற்றுமதியாளர்கள் இதன் மூலம் இரண்டு மடங்கு பலன் அடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் . அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அவர் 500 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு இரு தரப்பு வர்த்தகத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவை சேர்ந்த பல்வேறு வேளாண் பொருட்களுக்கும் அமெரிக்கா என்ற மிகப்பெரிய ஒரு சந்தை வாய்ப்பு கிடைத்திருக்கிறது, இந்த ஒப்பந்தம் மூலம் உள்நாட்டு விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட் போன்களுக்கு பூஜ்ஜிய வரி என்ற நிலை வரும் என கூறியுள்ளார். அப்படி என்றால் ஆப்பிள் நிறுவனம் மேலும் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும். தமிழ்நாட்டில் தான் ஃபாக்ஸ் கான், டாடா ஆகியவை ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications