அரவிந்த் சாமி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். சிறு வயதிலேயே சினிமா வாய்ப்பு கிடைத்து அதில் வளர்ந்து வரும் வேளையில் விபத்தில் சிக்கி அதிலிருந்து ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்தவர். ஒரு காலத்தில் பெண்களிடம் எப்படி மாப்பிள்ளை வேண்டும் என கேட்டால் அரவிந்த்சாமி போல வேண்டும் என கூறும் அளவுக்கு ரசிகைகளை கொண்டிருந்தவர் அரவிந்த் சாமி.
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்தார் அரவிந்த்சாமி. தன்னுடைய திறமை மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார். சிறந்த கதை தேர்வு, நடிப்பு என திரை உலகில் படிப்படியாக வளர்ந்தார்.

தளபதி, ரோஜா, பாம்பே என எல்லாம் படமும் ஹிட் தான். இப்படி இருக்கையில் 2005ஆம் ஆண்டு திடீரென அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதில் படுத்த படுக்கையானார். அரவிந்த் சாமியின் சினிமா கனவும் அத்துடன் நின்று போனது. இரண்டு ஆண்டுகள் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டிய சூழல். ஆனால் அரவிந்த்சாமி அதில் இருந்து ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்தார்.
முதலில் அவர் கவனம் செலுத்தியது தொழிலில் தான் . முதலில் ஸ்டீல் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் சொந்த நிறுவனத்தை தொடங்கினார். நியூஸ் 18 தகவலின் படி அரவிந்த் சாமி முதலில் ProLease India என்ற பேரோல் நிறுவனத்தில் இணைந்து பின்னர் 2005இல் Talent Maximus என்ற நிறுவனத்தை தொடங்கியதாகவும் குறிப்பிடுகிறது. 2022ஆம் ஆண்டில் Talent Maximus நிறுவனத்தின் மதிப்பு 3300 கோடி ரூபாய் என உயர்ந்தது.

சினிமாவை மட்டும் நம்பாமல் தன்னுடைய படிப்பை அடிப்படையாக கொண்டு தொழில் தொடங்கி அதில் வென்று சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த தொழில்முனைவோர் என்பதையும் நிரூபித்து காட்டினார் அரவிந்த்சாமி. இந்த தொழிலை ஒரு நிலைக்கு கொண்டு வந்து பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கினார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த தனிஒருவன் படம் பெரிய ஹிட் ஆனது. அரவிந்த் சாமியின் வில்லத்தனமான நடிப்பு அனைவருக்கும் பிடித்தது.
கார்த்திக் உடன் மெய்யழகன் படத்தில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விபத்தால் நடக்கவே முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த அரவிந்த்சாமியா இது என அனைவரையும் வியக்க வைத்தார். எத்தனை தோல்வி வந்தாலும் வாழ்க்கை நம்மை புரட்டியே போட்டாலும் அதில் இருந்து மீண்டு பெரிய அளவில் வளர முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக மாறியுள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

