வெறும் ரூ.3,000 தான் முதலீடு.. ஆனால் ரூ.6 லட்சம் மாத வருமானம்! கார் டிக்கியில் பிசினஸ் செய்யும் தம்பதியினர்!

எத்தனையோ தொழில் புதிதாக வந்தாலும் மக்களின் நாக்கை கட்டி போடும் உணவு வணிகத்திற்கு எப்போதுமே மவுசு உண்டு. பெரிய ரெஸ்டாரன்ட் அமைத்து தான் இதில் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை. தரமாகவும், சுவையாகவும் வழங்கினால் மிகச் சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றியைக் காண முடியும். அப்படித்தான் அகமதாபாத்தைச் சேர்ந்த தம்பதியினர் கோல்ட் கோகோ மற்றும் கோல்டு காஃபி ஆகிய இரண்டே இரண்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதன் மூலம் மாதம் ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.

சாப்ட்வேர் இன்ஜினியரான தர்ஷன் ஜின்சுவாடியா மற்றும் எம்பிஏ பட்டம் பெற்ற அவருடைய மனைவி சுருதி ஜின்சுவாடியா ஆகியோர் 2025-ஆம் ஆண்டு "தி கோகோ ஸ்டேஷன்" என்ற வணிகத்தை தொடங்கினர். இதற்காக ஆரம்பத்தில் அவர்கள் செய்த முதலீடு வெறும் 3000 ரூபாய் மட்டுமே.

வெறும் ரூ.3,000 தான் முதலீடு.. ஆனால் ரூ.6 லட்சம் மாத வருமானம்! கார் டிக்கியில் பிசினஸ் செய்யும் தம்பதியினர்!

ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 18 பாட்டில்கள் வரை விற்பனை செய்துள்ளனர். இதற்கு வருமானமாக 1120 ரூபாய் வரை கிடைத்துள்ளது. ஆனால் நாளடைவில் இவர்களுடைய சுவையான பானங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே.. தற்போது நாளொன்றுக்கு 150 பாட்டில்கள் வரை விற்பனை செய்கின்றனர். இதனால் மாதத்திற்கு ரூ.6 லட்சம் வரை வருமானம் பெற்று வருவதாக தி எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருவரும் வேலை பார்த்துக் கொண்டே பார்ட் டைமாக பிசினஸில் ஈடுபட்டனர். ஆனால் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க சுருதி தனது வேலையை முழுமையாக விட்டு விட்டார். ஆனால் தர்ஷன் சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே தனது மனைவிக்கு துணையாக பிசினஸில் பங்கெடுத்து வருகிறார்.

Also Read

ஒவ்வொரு நாளும் காலையிலே குளிர் பானம் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குகின்றனர். அதன் பிறகு உபகரணங்களை எல்லாம் சுத்தம் செய்து தயார் செய்கின்றனர். இதில் சுவாரசியம் என்ன தெரியுமா இவர்களுடைய கடை இயங்கும் விதம்தான். இருவரும் தங்கள் காரின் டிக்கியை பயன்படுத்தி அதில் தான் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக வாடகைக்கு இடமோ அல்லது ஸ்டாலோ போடவில்லை.

இது குறித்து தர்ஷன் பேசுகையில்.. "ஆரம்பத்தில் இது போன்ற தொழிலை செய்யலாமா? என்பதில் எங்களுக்கு சிறிய தயக்கம் இருந்தது. ஆனால் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தொழில் தொடங்கினோம். காலையில் அனைத்து பொருட்களையும் தயார் செய்து விடுவோம். நான் அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்பிய பிறகு 9 மணி வரையில் குளிர்பானங்களை விற்பனை செய்வோம்", என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்த தம்பதியினர் 30,000 பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளனர். இதனால் ரூ.36 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் கிடைத்துள்ளது. அதுவும் நவராத்திரி பண்டிகையின் போது 9 நாட்களில் 7500 பாட்டில்களுக்கும் அதிகமாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். இப்போது தினசரி வாருமானமாக ரூ.20,000 வரை கிடைக்கிறது. மாதத்திற்கு ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் பெறுகின்றனர்.

மூலப்பொருட்கள், பாட்டில்கள் மற்றும் இதர செலவுகளுக்காக மாதா மாதம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவு செய்கின்றனர். இருந்தாலும் ரூ. 4 லட்சம் வரை மிச்சமாகிறது. தொழில் தொடங்க பெரிய முதலீடுகள் தேவையில்லை. கன்சிஸ்டெண்சி இருந்தால் போதும் என்பதை இவர்களுடைய கதை நிரூபித்துக் காட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+