பாகிஸ்தானின் மிகப்பெரிய தொழிலதிபரும், பணக்காரராக இருக்கும் ஷாஹித் கான் ஒரு காலத்தில் அவர் படித்த பல்கலைக்கழகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்து, இன்று கோடீஸ்வரராகியுள்ளார்.
உலகில் இருக்கும் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் அனைவருக்கும் கடுமையான காலக்கட்டம் இருக்கும், இது பெரியதாக பேசிக்கொண்டே இருந்தால் அடுத்தக்கட்டத்திற்கு போக முடியாது என்பது பணக்காரர்களுடைய எண்ணம்.
ஆனால் சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பு, ஏழ்மையில் இருந்து வெற்றிப்பெற்ற கதை தான் உத்வேகத்தை கொடுக்கும். அப்படிப்பட்ட கதை தான் Shahid Khan உடையது.
யார் இந்த ஷாஹித் கான்!
ஷாஹித் கான் பாகிஸ்தான் லாகூரில் ஜூலை 18,1950 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் கட்டுமானப் பணித் தொழிலாகளாக இருந்தனர். இப்படியான வறுமையான சூழலில் பிறந்த வளர்ந்தவர் தான் ஷாஹித் கான்.
மிகப்பெரிய தொழிலதிபர்!
இப்போது ஷாஹித் கான், ஒரு பில்லியனர் தொழிலதிபர் மற்றும் விளையாட்டு அதிபராகவும் உள்ளார். ஃப்ளெக்ஸ்-என்-கேட்டின் (Flex-N-Gate) உரிமையாளராகவும் உள்ளார். ஃப்ளெக்ஸ்-என்-கேட் மோட்டார் வாகன உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனமாகும்.
ஜாக்சன்வில்லே ஜாகுவார்ச் (Jacksonville Jaguars) இவர் வசம்!
ஷாஹித் கான் நேஷனல் புட்பால் லீக் (NFL) மற்றும் ஃபுல்ஹாம் F.C இன் பிரீமியர் லீக்கின் ஜாக்சன்வில்லே ஜாகுவார்ச் டீமையும் தன்வசம் வைத்துள்ளார். அவர் தனது மகன் டோனி கானுடன் இணைந்து அமெரிக்க மல்யுத்த ஊக்குவிப்பு அமைப்பான All Elite Wrestling (AEW) இணை உரிமையாளராகவும் உள்ளார்.
பாத்திரம் கழுவும் வேலை!
ஷாஹித் கான் இல்லினாய்ஸ் அர்பானா - சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் (University of Illinois Urbana-Champaign) படிக்கும் போது பாத்திரம் கழுவும் வேலை செய்து படிப்பை முடித்துள்ளார்,
12 பில்லியன் டாலருக்கு அதிபதி!
இன்று இவர் பாகிஸ்தானின் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். மேலும் இவரின் நிகர சொத்து மதிப்பு சுமார் 12 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
முகேஷ் அம்பானிக்கு டஃப்!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 82 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. அதேபோல பொருளாதாரத்தில் பின் தங்கிய நாட்டிலிருந்து கொண்டு 12 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை வைத்துள்ள ஷாஹித் கான் முகேஷ் அம்பானிக்கு இணையானவர் இல்லை என்றாலும், ஒரு நல்ல தொழிலதிபராக உள்ளார் என்பது மறுப்பதற்கில்லை.
பாகிஸ்தான் பொருளாதார மந்தநிலை!
கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் அடைந்த வளர்ச்சியில் பாதியை கூட பாகிஸ்தான் அடையவில்லை. மோசமான அரசியல் கொள்கைகள், தவறான அரசியல் முடிவுகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளாலும் பாகிஸ்தான் வளர்ச்சி அடையத் தவறிவிட்டது என்றே கூறலாம். அதிலும் தற்சமயம் பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சி என்பது கட்டுக்கடங்காமல் சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
தொழிலதிபராக
பாகிஸ்தானில் சிலர் நல்ல தொழிலதிபராக மாறி உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளனர், அதில் ஷாஹித் கானும் ஒருவர். ஆனால் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையை பொறுத்தவரை பாகிஸ்தானிய தொழிலதிபர்களால், இந்தியாவின் முன் போட்டியிட முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications