சில சமயங்களில் நம் வாழ்க்கையில் எடுக்கக்கூடிய சில முடிவுகள் நமக்கு மட்டுமின்றி இலட்சக்கணக்கான மக்களுக்கும் பயன் தரக்கூடிய ஒரு முடிவாக மாறிவிடும். அப்படித்தான் விஞ்ஞானியாக இருந்த டாக்டர் பாத்திமா பெனசீர் தொழில் முனைவோராக மாறி இந்தியாவின் பயோடெக் துறையில் பெரிய புரட்சியையும் ஏற்படுத்தி வருகிறார் .
விஞ்ஞானி: அசூகா லேப்ஸ் (Azooka labs)என்பது பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஒரு பயோ டெக் நிறுவனம் . இதன் நிறுவனரான டாக்டர் பாத்திமா பெனசீர் ஒரு விபத்தாக தான் தொழில் முனைவோராக மாறியதாக குட்ரிட்டர்ன்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகிறார். தன்னுடைய நண்பர் அலெக்ஸ் உடனான ஒரு கலந்துரையாடலின் போது தான் நாம் ஏன் ஒரு தொழில் முனைவோராக மாறக்கூடாது இந்த உயிரி தொழில்நுட்பத்தில் நம்மக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு மக்களுக்கு கு பயனுள்ள விஷயங்களை ஏன் கொண்டு வரக்கூடாது என்ற எண்ணம் தோன்றியதாம் . அப்படி உருவானது தான் அசூகா லேப்ஸ் நிறுவனம்.

பயோடெக் துறையில் சாதனை: மரபியல் ஆய்வு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உடல் ஆரோக்கிய பிரிவில் உலக அளவில் பெரிய நிறுவனமாக அசூகா லேப்ஸை உருவாக்க வேண்டும் என்பதே தன்னுடைய பெரிய இலக்கு எனக் கூறுகிறார். ஒரு விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்த தனக்கு ஒரு தொழில் முனைவராக ஒரு பொருளை எப்படி தயாரிப்பது சந்தைப்படுத்துவது இலட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு விஷயமாக எப்படி அதனை மாற்றுவது என்பது குறித்த பல்வேறு சவால்கள் இருந்ததாக கூறுகிறார் .
முதல் தயாரிப்பிலேயே சக்சஸ்: இந்திய சந்தையில் ஏற்கனவே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் பயோடெக் ப்ராடக்டுகள் இருக்கும்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி மக்களுக்கு இதன் மீது நம்பிக்கை வளர்ப்பது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்களை தொடக்கத்தில் சந்தித்ததாக கூறுகிறார். Tinto Rang எனப்படும் உலகின் முதல் உணவு தர பாதுகாப்பு மூலக்கூறு சாயத்தை தயாரித்ததே இந்நிறுவனம் செய்த சாதனை, இது புற்றுநோய் உண்டாக்கும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் மூலக்கூறு சாயங்களோடு ஒப்பிடுகையில் உடல்நலனுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாது.
என்ன சவால்கள்: கொரோனா காலத்தில் ஆர்டி பிசிஆர் சோதனையில் இது அதிகம் பயன்படுத்தப்பட்டதே நிறுவனத்தின் மீதான ஆய்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியதாக கூறுகிறார். இந்தியாவைப் பொறுத்தவரை பயோடெக் பிரிவில் ஒரு ஸ்டார்ட் பை தொடங்கி அதனை அதில் ஒரு ஆய்வினை நடத்தி ஒரு பொருளை தயாரித்து மக்களுக்கு பயனுள்ள பொருளாக மாற்றுவது என்பது சவால் மிகுந்த ஒரு பணியாக இருக்கிறது என கூறுகிறார் . இதற்கு போதிய அளவிலான முதலீடுகளும் குறிப்பிட்ட காலம் காத்திருத்தலும் அவசியம் என அவர் தெரிவிக்கிறார். வீடியோ இண்டர்வியூவ்.
விருதுகள்: அசூகா லேப்ஸ் நிறுவனம் தங்களுடைய கோவிட்-19 சாம்பிள் கலெக்சன் கிட்டிற்காக டெக்னாலஜி டெவலப்மென்ட் போர்டு விருதினை பெற்றிருக்கிறது . ஒரு பெண்ணாகவும் ஒரு விஞ்ஞானியாகவும் ஒரு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்த பெரும் சவால்களை சந்தித்ததாக கூறும் இவர் இந்திய பயோடெக் துறையில் பல்வேறு புதுமைகளை கொண்டு வர வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என நம்பிக்கை உடன் தெரிவிக்கிறார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications