பெங்களூரு: திருப்பதி பெருமாள் கோவிலில் மீண்டும் கர்நாடக பால் கூட்டமைப்பு நிறுவனமான நந்தினி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வட இந்தியாவில் எப்படி அமுல் பால் நிறுவனம் அனைவருக்கும் பரிச்சயமானதோ அதேபோல தென்னிந்தியாவில் நந்தினி பால் நிறுவனம் அனைவருக்கும் பரிச்சயமானதாக இருக்கிறது. இதன் பின்னால் லட்சக்கணக்கான விவசாயிகளின் உழைப்பு இருக்கிறது.
நந்தினி பால் நிறுவனத்தை பொருத்தவரை கர்நாடகாவின் மிகப்பெரிய ஒரு பால் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனம் கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ,மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களிலும் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

நந்தினி என்ற பிராண்ட் கர்நாடகா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான ஒரு பிராண்ட் ஆகும். இந்தியாவில் நம்பர் ஒன் பால் கூட்டுறவு நிறுவனமாக குஜராத்தின் அமுல் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பால் கூட்டுறவு நிறுவனமாக நந்தினி செயல்பட்டு வருகிறது.
1955 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் தான் முதன்முறையாக பால் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யும் முறை நடைமுறையில் கிடையாது. விவசாயிகள் மக்களின் வீடுகளுக்கே தேடிச்சென்று பால் விநியோகம் செய்தார்கள்.
பின்னர் 1970களில் இந்த கூட்டுறவு சங்கம் பால் உற்பத்தியை அதிகப்படுத்துவது என முடிவெடுத்தது. அந்த சமயத்தில் தான் அதாவது 1970 ஜனவரியில் இந்தியாவிலும் வெள்ளை புரட்சி அறிமுகமானது.
இந்தியாவில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கும் உலக வங்கி நிதி உதவி செய்தது. இதன் அடிப்படையில் தான் 1974 ஆம் ஆண்டு கர்நாடக அரசு கர்நாடக பால் மேம்பாட்டு கழகம் என்பதை உருவாக்கியது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு இது கர்நாடக பால் கூட்டுறவு சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தான் இந்த கூட்டுறவு சங்கம் நந்தினி என்ற பிராண்டை உருவாக்கி அதன் கீழ் பாக்கெட்களில் பால் விற்பனை செய்ய தொடங்கியது.
இப்படி கர்நாடகா முழுவதும் தன்னுடைய விற்பனையை அதிகப்படுத்திய நந்தினி பிராண்ட், அண்டை மாநிலங்களிலும் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்தது.
நந்தினி பிராண்டுக்கு உரிமையாளராக இருக்கக்கூடிய கர்நாடகா பால் கூட்டுறவு சங்கத்தின் கீழ் மொத்தம் 15 பால் உற்பத்தியாளர் யூனியன்கள் இருக்கின்றன. இவை மாவட்ட அளவில் செயல்படக்கூடிய பால் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து நந்தினி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கிறது.
நந்தினி சார்பில் நாள்தோறும் 24000 கிராமங்களில் 26 லட்சம் விவசாயிகளிடமிருந்து 86 லட்சம் கிலோ பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு செல்லாமல் தொடர்ந்து இந்த சங்கத்திடமே பாலை வழங்குவதற்கு காரணம், பால் கொள்முதல் பணமானது அன்றைய தினமே விவசாயிகள் கைக்கு சென்றுவிடும்.
ஒரு நாளைக்கு இந்த நிறுவனம் 28 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு பால் கொள்முதல் கட்டணமாக வழங்குகிறது. இதனை அடுத்து நந்தினி நிறுவனம் 15 யூனிட்டுகளைக் கொண்டு பாலை பிராசசிங் செய்து பாக்கெட்டுகளில் மாற்றுகிறது.
தற்போது இந்த நிறுவனம் நந்தினி என்ற பிராண்டின் பால், தயிர், பட்டர், பன்னீர், சீஸ் , நெய், சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 148 பொருட்களை விற்பனை செய்கிறது.2022-23 ஆம் நிதி ஆண்டில் மட்டும் நந்தினி பால் நிறுவனம் 19,784 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது.
திருப்பதி பெருமாள் கோவிலுக்கு லட்டு தயாரிக்க தேவையான நெய் வழங்கும் ஒப்பந்தமும் இது பெற்றிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அந்த ஒப்பந்தம் நந்தினி நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை. நெய் கலப்படம் சர்ச்சையை தொடர்ந்து நந்தினி நிறுவனத்திடமே மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications