ஜார்க்கண்ட்: விடா முயற்சியும், கடினமான உழைப்பும் இருந்தால் குடிசை வீட்டில் வாழ்பவர் கூட கோபுரத்தின் உச்சிக்கு செல்ல முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் பிரபல யூடியூபர்.
யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் வருகை பலருக்கும் வாழ்க்கையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. கண்டனட் கிரியேஷன் மூலம் பலரது வாழ்க்கையிலும் பெருமளவிலான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அப்படி 2018 ஆம் ஆண்டில் ஓட்டு வீட்டில் வசித்து வந்த ஒரு நபர் youtube மூலம் சானல் உருவாக்கி கண்டெண்ட் வெளியிட்டு 16 கோடி ரூபாய்க்கு சொத்துக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் தான் மனோஜ் தேய். மிக எளிமையான ஒரு குடும்பத்தில் பிறந்தவர். குறிப்பாக நிதி ரீதியாக சிறுவயதிலிருந்தே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டவர். இவருடைய தந்தை சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடையை வைத்திருந்தார். அரசு பள்ளியில் படிப்பை முடித்த இவர் யூடியூப் தளங்களில் கண்டண்ட் கிரியேட் செய்ய தொடங்கினார்.
படிப்படியாக யூடியூப் வீடியோ குறித்தும் கண்டெண்ட் கிரியேஷன் குறித்தும் இலவசமாக கிடைக்கும் கருவிகள் செயலிகளை கொண்டே கற்று கொண்டார். இவர் மூன்று சேனல்களை உருவாக்கி மூன்றிலுமே தோல்வி அடைந்திருக்கிறார். ஆனால் அந்த முயற்சிகள் அவருக்கு பல பாடங்களை கற்று தந்தன.
ஒரு புறம் வேலைக்கு செல்வது மறுபுறம் யூடியூப்பில் வீடியோ வெளியிடுவது என தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். டெக் அடிப்படையிலான வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் இவருக்கு ஃபாலோவர்கள் கிடைக்க தொடங்கினர். மனோஜ் தேய் என்ற பெயரில் இவர் நடத்தும் சேனலுக்கு 7.22 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு முதல்முறையாக இவர் மாருதி செலரியோ காரை சொந்தமாக வாங்கி இருக்கிறார் , டாடான் ஹேரியர்ம் டொயோட்டா ஃபார்ச்சூனர் என அப்கிரேட் செய்த இவர் இந்த ஆண்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை சொந்தமாக்கியுள்ளார்.
யூட்யூபில் தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவு செய்ததன் மூலம் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஓட்டு வீட்டில் வசித்து வந்த இவர் தற்போது சொந்தமாக ஒரு மாளிகையை கட்டி இருக்கிறார் .வேலைக்கும் சென்று கொண்டு மற்றொருபுறம் யூடியூபிலும் தொடர்ந்து இவர் கவனம் செலுத்தி வந்தார். இந்த ஏழு வருடத்திலேயே அவருடைய நிலைமையே தலைகீழாக மாறி இருக்கிறது, தற்போது 16 கோடி சொத்துக்கு அதிபதியாக மாறி இருக்கிறார் , மாதம் சுமார் பத்து லட்சம் ரூபாய் வரை இவருக்கு வருமானம் கிடைக்கிறது. பல இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக மாறி இருக்கிறார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications