தமிழ்நாட்டில் ஜவுளி நிறுவனம் என்ற உடனே அனைவரின் நினைவுக்கும் வரக்கூடிய ஒரு சில கடைகளில் போத்தீஸும் ஒன்று. நான்கு தலைமுறை கண்ட ஒரு துணி வியாபார நிறுவனம் போத்தீஸ். அண்மையில் இந்த நிறுவனம் நகை தொழிலிலும் கால்பதித்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நெசவாளர்கள் நிறைந்த பகுதி. 1920களில் இந்த பகுதியை சேர்ந்த கே.வி. போத்தி மூப்பனார் தங்கள் ஊரில் நெய்யப்பட்ட துணிகளை கொண்டு சென்று விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினார். பின்னர் 1935ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தின் அருகே சிறிய கடையாக தொடங்கப்பட்டது போத்தி மூப்பனார் துணிக்கடை .

இவரது மகனான சடையாண்டி போத்தி தான் துணி வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர். தற்போது தமிழ்நாடு எங்கும் போத்தீஸ் தன்னுடைய கிளைகளை பரப்பி பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக மாறி இருக்கிறது. இதற்கு வித்திட்டவர் சடையாண்டி தான். இவர் போத்தீஸ் என கடைக்கு பெயர் மாற்றம் செய்து தங்களின் இரண்டாவது கிளையை திருநெல்வேலியில் திறந்தார்.
1986ஆம் ஆண்டு திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட போத்தீஸ் தான் இவர்கள் வளர்ச்சிக்கு வித்திட்டது மேலும் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமான ஜவுளி வியாபார நிறுவனமாக மாற்றியது. தரம், புதுமை ஆகிய இரண்டும் போத்தீஸ் நிறுவனத்தின் அடையாளமாக மாறியது. வாய் வழியாகவே மக்களிடம் சென்று சேர்ந்தது போத்தீஸ் நிறுவனம். தனித்துவமான வடிவமைப்பு மற்றும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஒரு புதிய தீம் கொண்ட துணிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என ஆண்டுதோறும் புதுமைகளை புகுத்தி படிப்படியாக வியாபாரத்தில் வளர்ந்து பெரிய ஜவுளி சாம்ராஜ்யமாக உருவாகியிருக்கிறது.
இதன் பின்னணியில் இருப்பவர் சடையாண்டி. அவரை தொடர்ந்து ரமேஷ் உள்ளிட்ட அவரது மகன்களும் , பேரப்பிள்ளைகளும் தற்போது போத்தீஸ் சாம்ராஜ்ஜியத்தை நிறுவி வருகின்றனர். தற்போது போத்தீஸ் நிறுவனம் தென்னிந்திய நகரங்களில் 18 இடங்களில் தன்னுடைய கடைகளை செயல்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 96 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட நான்கு தலைமுறைகளை கண்ட நிறுவனமாக போத்தீஸ் இருக்கிறது.
சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி என பெரு நகரங்கள் எங்கும் தற்போது போத்தீஸ் செயல்பட்டு வருகிறது. வியாபாரத்தில் எந்த ஒரு புதிய ஐடியாவையும் முயற்சி செய்து பார்த்த விட வேண்டும் எடுத்தவுடனே அதற்கு நோ சொல்லக்கூடாது என்பதுதான் போத்தி தன்னுடைய பிள்ளைகளுக்கு கற்றுத்தந்த பாடம். அதை பின்பற்றி தான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தையே அவர்கள் வளர்த்திருக்கிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்கள் whatsapp வழியாக விற்பனையை கொண்டு வந்து தங்களுடைய வாடிக்கையாளர்களோடு தொடர்ந்து இணைப்பிலேயே இருந்தனர். இதன் காரணமாக லாக் டவுன் காலத்திலும் போத்தீஸ் நிறுவனத்தின் விற்பனை குறையாமலேயே இருந்தது. போத்தீஸ் சாம்ராஜ்யத்தின் நான்காவது தலைமுறை முதன்முறையாக ஜவுளி கடந்து நகை தொழிலிலும் கால்பதித்துள்ளது.
ஹரன் இந்திய பணக்காரர்கள் பட்டியலின்படி ரமேஷ் போத்தி 7000 கோடி சொத்து மதிப்புகளுடன் தமிழ்நாட்டின் பணக்காரர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். போத்தீஸ் நிறுவனத்தை பொருத்தவரை தங்களுடைய புதுமையான யோசனைகள் மூலமும் சரியான வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கான பொருட்களைக் கொண்டு சேர்த்ததிலும் தான் அதன் வெற்றி இருக்கிறது .
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications