1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் முதல் மொத்த குடும்பமும் எம்எல்ஏ ஆனது வரை!!

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியையும் பலருக்கு மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுகவே இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகின. ஆனால் அந்தக் கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கி இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்களும் நிகழ்ந்துள்ளன.

விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கும் அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி நிலவரம்:

தமிழக வெற்றி கழகம் - 108 தொகுதிகள்

திமுக கூட்டணி - 73 தொகுதிகள்

அதிமுக கூட்டணி - 53 தொகுதிகள்

நாம் தமிழர் கட்சி - 0

1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் முதல் மொத்த குடும்பமும் எம்எல்ஏ ஆனது வரை!!

திமுக கூட்டணி:

திமுக - 59

காங்கிரஸ் - 5

விசிக - 2

தேமுதிக - 1

கம்யூனிஸ்ட் - 4

அதிமுக தலைமையிலான கூட்டணி:

அதிமுக - 47

பாமக - 4

பாஜக - 1

அமமுக -1

கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்:

தவெக - 34.95% வாக்குகள்

திமுக+கூட்டணி கட்சிகள் - 31.38 %

அதிமுக+கூட்டணி கட்சிகள் - 27.40%

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே தவெக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார். இது திமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிடமே வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்து இருக்கிறார்.

Also Read

தற்போது தவெகவிற்கு 108 தொகுதிகள் உள்ளன ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வார் என்பதால் மெஜாரிட்டியை நிரூபிக்க கூடுதலாக 11 இடங்கள் தேவை. எனவே எந்தெந்த கட்சிகள் தவெக உடன் கூட்டணி அமைக்க போகின்றன அல்லது வெளியிலிருந்து ஆதரவு தந்து ஆட்சி அமைக்க உதவி செய்யப் போகின்றன என்பது அடுத்தடுத்து தெரிய வரும்.

பல்வேறு தொகுதிகளிலும் திமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது மிகக் குறைந்த அளவிலேயே இருந்ததை காண முடிந்தது. குறிப்பாக ஒரு தொகுதியில் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

Recommended For You

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக அமைச்சர் பெரிய கருப்பன் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி அமைச்சர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்று தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியிருக்கிறார்.

1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் முதல் மொத்த குடும்பமும் எம்எல்ஏ ஆனது வரை!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்க உள்ளனர். பிரபல லாட்டரி அதிபரான் மார்ட்டினின் ஒட்டுமொத்த குடும்பமும் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக பதவி ஏற்க உள்ளது. இந்த குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு கட்சிகளின் பயணம் செய்து எம்எல்ஏக்களாக இந்த சட்டமன்ற தேர்தலில் ஜொலித்திருக்கின்றனர்.

பிரபல லாட்டரி அதிபரான மார்ட்டினினி மகன் தான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவர் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியிருக்கிறார். மார்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு அவரும் வெற்றி பெற்றிருக்கிறார். இவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் ஒரே சமயத்தில் வெவ்வேறு கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களாக மாறி இருப்பது தான் இந்த தேர்தல் தேர்தலில் நடந்த விந்தைகளுள் ஒன்று.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+