சாதிக்கத் துடிக்கும் பெண்கள் திருமணமாகி இல்லத்தரசியாக மாறிய பின் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பிலேயே மூழ்கி விடுகின்றனர். அப்படி இருக்கையில் இல்லத்தரசியாகவும் செயல்பட்டு, அதோடு நிதி சுதந்திரம் அடைய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் இங்கு வெற்றியாளர் தான். அந்த வகையில் இன்றும் ஒரு இல்லத்தரசியைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இல்லத்தரசி தான் சந்தனா காடே. இவர் ஆர்கானிக் தோட்டக்கலை மீது பெரிதும் ஆர்வம் கொண்டவர். தற்போது தனது ஆர்வத்தையே ஒரு வெற்றிகரமான வணிகமாக மாற்றியிருக்கிறார். 2016-ஆம் ஆண்டில் வெறும் ரூ.1 லட்சம் முதலீடு செய்து தனது கணவர் நவீன் ஆதரவுடன் லட்சங்களில் சம்பாதித்து வருகிறார்.

நகரங்களில் வசிக்கும் பலர் மாடியில் அல்லது பால்கனியில் தோட்டம் வைக்க வேண்டி அவ்வப்போது விதைகளை வாங்குவார்கள். இது போன்ற நபர்களை குறி வைத்து சந்தனா ஒரு தளத்தை உருவாக்கினார். அதன் பெயர் "சீட் பாஸ்கெட்".
முதன் முதலில் இந்த தளத்தை தொடங்கும் போது இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என்பது அவருக்கே தெரியாது. தனது மகளுக்கு ஆரோக்கியமான வீட்டில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை உணவளிக்க வேண்டும் என்பதற்காக தரமான விதைகளை வெளியில் வாங்கியுள்ளார். அப்போது விதைகளை தேடுவதில் சவால்கள் இருந்துள்ளது.
இதைத் தெரிந்து கொண்ட சந்தனா நவீனுடன் இணைந்து சீட் பாஸ்க்கெட்டை தொடங்கினார். முதன்முதலாக அவர்கள் அந்த தளத்தை தொடங்கும் போது இரண்டே இரண்டு ஆர்டர்கள் தான் வந்தது. தொடர்ந்து முயற்சி செய்து பல்வேறு விதைகளை வாங்கி விற்பனை செய்ய தொடங்கினர். இன்று இந்தியா முழுவதும் 30,000-த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சீட் பாஸ்க்கெட் மூலம் காய்கறி, பழம் மற்றும் பூ விதைகளை வாங்குகின்றனர். அத்துடன் தோட்டக்கலைக்கு தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளும் சீட்பாஸ்கெட் தளத்தில் கிடைக்கிறது.
தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் டாடா ஹெல்ப் ஏஜ் போன்ற நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற நிறுவனங்களுக்கு விதைகளை வழங்கி தோட்டக்கலை தொடர்பான திட்டங்களுக்கு உதவி வருகிறது. அவ்வப்போது மரம் நடும் விழாவெல்லாம் நடப்பது வழக்கம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் விதைகளை வழங்குகிறது.
எதிர்காலத்தில் சீட் பாஸ்கெட் ஒரு மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி அதன் தயாரிப்புகளுக்கு சலுகைகளை வழங்கி விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அதிக மக்கள் தற்போது ஆர்கானிக் தோட்டக்கலையை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற வணிகம் இன்னும் சிறப்படையும் என்பதில் சந்தேகமே இல்லை.
வீட்டுப் பொறுப்புகளை கவனித்துக் கொண்டு தொழில் முனைவோராக மாற முடியாது என்ற கருத்து நிலவி வரும் வேளையில், அதை தகர்த்தெறிந்து தானும் ஒரு தொழில் முனைவோராக மாறி இருக்கிறார் சந்தனா. இவர் நிதி ரீதியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்று கூறிக்கொண்டு முயற்சி செய்யாமல் இருக்கும் பல இல்லத்தரசிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தற்போது சந்தனா விதை விற்பனையின் மூலம் வருடத்திற்கு ரூ. 50 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications