ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரைச் சேர்ந்த 36 வயதான ரோஹித் ஜா, உலகளாவிய இண்டர்நெட் இணைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டை திரட்டி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் ரோஹித் ஜா கடந்து வந்த பாதை.
ரோஹித் ஜா செய்து வந்த பணிக்கும், தற்போது அவர் துவங்கியுள்ள நிறுவனத்தின் துறையும் சற்றும் தொடர்பு இல்லாத ஒன்றாக உள்ளது. சிங்கப்பூரில் ராயல் வங்கி ஆப் கனடாவில் ஹைய் ப்ரீக்வென்சி டிரேடிங் பிரிவில் பணியாற்றி வந்தார். அப்போது உலகின் பல பகுதிகளில் இண்டர்நெட் இணைப்பு கிடைக்காத நிலையை ஜா கவனித்தார்.

வங்கித் துறையில் பணியாற்றிய போது, அதிக வருமானம் ஈட்டக்கூடிய பகுதிகளில் மட்டுமே இண்டர்நெட் இணைப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருவதையும், கிராமப்புறம் மற்றும் தொலைதூர கிராமங்கள் போன்ற பகுதிகள் புறக்கணிக்கப்படுவதையும் ரோஹித் ஜா கவனித்தார். இதுதான் Transcelestial என்னும் நிறுவனத்தை உருவாக்க முதல் காரணமாக இருந்துள்ளது.
2015 ஆம் ஆண்டில், ரோஹித் ஜா தனது கனவை நினைவாக்கும் முயற்சியில் வங்கி வேலையை விட்டுவிட்டு, டிஜிட்டல் இண்டர்நெட் துறையில் புதிய புரட்சியை உருவாக்கும் வகையில் புதிய இண்டர்நெட் இணைப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கும் பயணத்தை மேற்கொண்டார்.
ரோஹித் ஜா டிரான்செலஸ்டியல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை இணைந்து நிறுவினார். செல் டவர்கள், தெரு விளக்குக் கம்பங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளுக்கு இடையே லேசர் மூலம் இண்டர்நெட் வழங்கும் புதிய வழியை டிரான்செலஸ்டியல் உருவாக்க உள்ளது. இந்த புதுமையான அணுகுமுறை தொலைதூர பகுதிகளுக்கு கூட அதிவேக இண்டர்நெட் இணைப்பை வழங்கும் என இந்நிறுவனம் கூறுகிறது.
டிரான்செலஸ்டியல் தொழில்நுட்பத்தின் வாயிலாக விண்வெளியில் சிறிய செயற்கைக்கோள்கள் கொண்ட ஒரு தொகுப்பை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தொகுப்பு லேசர் வலையமைப்பை கண்டங்களைக் கடந்து சென்று அதிகவேக இண்டர்நெட் சேவையை அளிக்கும். இதனால் உலகின் மிக தொலைதூர இடங்களையும் இணைக்கும் என தெரிகிறது.
டிரான்செலஸ்டியல் நிறுவனம் 24 மில்லியன் டாலர் நிதியை தற்போது திரட்டியுள்ளது. ரோஹித் ஜா செய்யும் இந்த பணியை தான் எலான் மஸ்க் வித்தியாசமான தொழில்நுட்பத்தில் ஸ்டார்லிங்க் சேவை மூலம் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications