ரெப்போ வட்டி விகித குறைப்பு – எந்தெந்த துறைகளில் எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் 0.50 அடிப்படை புள்ளிகள் குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருப்பது தான் நாடு முழுவதும் முக்கியமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. அதாவது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கக்கூடிய கடன் விகிதத்தை தான் ரெப்போ வட்டி என அழைக்கிறோம் . அதை தான் ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது.

தங்களுக்கு வட்டி விகிதம் குறைந்து இருப்பதால் வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய வாகன கடன் மற்றும் வீட்டு கடன்களுக்கான வட்டியையும் குறைக்கும். எனவே கடன் வாங்கியவர்கள் மத்தியில் இது ஒரு நல்ல அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 6.5% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதமானது 5.5% என குறைக்கப்பட்டு இருக்கிறது.

ரெப்போ வட்டி விகித குறைப்பு –  எந்தெந்த துறைகளில் எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தும்?

அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ,சர்வதேச அளவிலான பொருளாதார சூழல் என பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு இந்திய பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் என்னென்ன துறைகளில் என்னென்ன தாக்கம் ஏற்படும் என்பது குறித்து செபியில் பதிவு செய்யப்பட்ட பங்குச்சந்தை ஆய்வாளாராக இருக்கும் விவேக் காத்ரி என்பவர் எக்ஸ் தள பக்கத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார்.

வங்கி: வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இது சிறந்த அறிவிப்பு என கூறியுள்ளார். வட்டி விகிதம் குறைந்துள்ளதால் வங்கிகளில் கடன் வாங்கும் போக்கு அதிகரிக்கும் இது நீண்ட கால நோக்கில் வங்கிகளுக்கு லாபமானதாக அமையும். குறிப்பாக சிறு குறு நடுத்தர தொழில்களை சேர்ந்தவர்கள் அதிக கடன்களை வாங்குவார்கள். இது நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவும். எனவே ரிசர்வ் வங்கி இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மூலம் பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரியல் எஸ்டேட் துறை: வட்டி விகிதங்கள் குறைந்து இருப்பதால் பெரும்பாலானவர்கள் வங்கியில் கடன் வாங்கி வீடுகளை வாங்குவதற்கு முன் வருவார்கள். இதன் மூலம் இந்தியாவில் வீடுகளின் விற்பனை அதிகரிக்கும் இது ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு மிகச்சிறந்த ஒரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே 4.5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் இருப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை வீடுகள் விற்பனைக்கு உதவும். டிஎல்எஃப், சோபா, கோத்ரேஜ் பிராப்பர்ட்டி ஆகிய பங்குகளை கவனத்தில் கொள்ளலாம்.

வாகன விற்பனை: வட்டி விகித குறைப்பு நடவடிக்கை என்பது வாகனங்களுக்கான வட்டியையும் குறைக்க தூண்டுகிறது. எனவே இந்தியாவில் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும். அதாவது பலரும் வங்கியில் கடன் வாங்கி வாகனங்களை வாங்குவதற்கு முன் வருவார்கள். இது வாகனத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை ஊக்குவிக்கும். இந்த துறையில் மகேந்திரா மகேந்திரா, ஹீரோ மோட்டார், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை நாம் கவனத்தில் கொள்ளலாம்.

எஃப்எம்சிஜி: இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் குறையும் என ரிசர்வ் வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது. அப்படி என்றால் பொருட்களின் விலைவாசி குறையும். இது மக்களுக்கு நல்ல அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. மக்கள் கடன்களுக்காக செலுத்தும் மாதாந்திர ஈஎம்ஐ தொகையும் வட்டி குறைப்பின் மூலம் குறைந்திருக்கிறது. எனவே மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். எனவே நுகர்வு போக்கு அதிகரிக்கும். இந்த பிரிவில் ஹெச்யூஎல், ஐடிசி, வோல்டாஸ், கிராம்ப்டன் நிறுவனங்களின் பங்குகளை கவனத்தில் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+