டெல்லியின் தெருக்களில் நடந்து சென்றாலே நம்மைச் சுற்றிலும் பல்வேறு சுவையான உணவுகளின் வாசம் வீசும். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு தனித்துவமான சுவையில் உணவுகள் நம்மை கட்டி இழுக்கும். குறிப்பாக டெல்லி தெருவோர உணவைப் பற்றி பேசும்போது சோலே பட்டூரா தான் பலருக்கும் நினைவுக்கு வரும். சோலே பட்டூரா உடன் மசாலாவை சேர்த்து சாப்பிடும் அனுபவத்தை யாராலும் மறக்க முடியாது. அப்படி ஒரு அற்புதமான சுவையில் பல ஆண்டுகளாக டெல்லி மக்களுக்கு வழங்கி வருபவர்கள் தான் சீதா ராம் மற்றும் திவான் சந்த்.
1995-ஆம் ஆண்டில் சீதா ராம் மற்றும் திவான் சந்ந் ஆகியோர் பஹர்கஞ்ச் டிஏவி பள்ளிக்கு முன்பு சூடான மற்றும் சுவையான சோலே பட்டூராவை விற்பனை செய்யத் தொடங்கினர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் முதன் முதலாக சைக்கிளில் தான்.. இந்த இருவரும் விற்பனையைத் தொடங்கினர்.

1970 வாக்கில் அவர்களின் சோலே பட்டூரா மிகவும் பிரபலமடைந்தது. இதனை அடுத்து இருவரும் இம்பீரியல் சினிமா ஹால் எதிரில் ஒரு சிறு கடையை திறந்தனர். இது அவர்களுடைய வணிகத்திற்கு ஊக்கத்தை வழங்க தொடங்கியது. டெல்லியின் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்ததால் இப்பகுதி ஒரு வணிக மையமாக உருவெடுக்கத் தொடங்கியது. அதை தொடர்ந்து சீதா ராம் மற்றும் திவான் ஆகியோரின் சோலே பட்டூராவை அதிகமாக மக்கள் சாப்பிட தொடங்கினர்.
அதன் பிறகு 2008-ஆம் ஆண்டில் சீதாராம் மற்றும் திவான் சந்த் குடும்பத்தின் பேரக்குழந்தைகளான ராஜீவ் கோஹ்லி மற்றும் உத்சவ் கோஹ்லி ஆகியோர் இந்த பாரம்பரிய வியாபாரத்தை இன்னும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் சென்றனர். பிதம்புரா, பஸ்சிம் விஹார் மற்றும் குருகிராம் போன்ற டெல்லியின் முக்கிய பகுதிகளில் புதிய கிளைகளை திறந்தனர்.
இதனால் இவர்களுடைய சோலே பட்டூராவின் புகழ் மேலும் பரவத் தொடங்கியது. ஏற்கனவே பஹர்கஞ்ச் பகுதியில் பிரபலமான இந்த சுவை புதிய கிளையின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றடைந்தது. இதனால் இங்கு இந்த பிரபலமான உணவை விரும்பி வாங்கும் உணவு பிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. ஒரே சுவையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டது மக்களுக்கு வசதியாக அமைந்தது.
இப்போது புனீத் கோஹ்லியின் தலைமையில் இந்த பாரம்பரிய வணிகம் டிஜிட்டல் முறையில் நடக்கிறது. காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது சோலே பட்டூராவை ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். உணவு டெலிவரி தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மூலமாகவும் அவர்களுடைய சொந்த இணையதளம் மூலமாகவும் மக்கள் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம். தற்போது பல பிரபலமான உணவு டெலிவரி தளங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சைக்கிளில் ஆரம்பித்த வணிகத்தின் மூலம் லட்சக்கணக்கில் தற்போது சம்பாதித்து வருகின்றனர். இதன் மூலம் இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications