சென்னை: இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான தொழில் துறை முதலாளிகள் சொகுசு கார்களிலும், கார்ப்பரேட் ஜெட் விமானங்களிலும் பயணம் செய்கிறார்கள். ஆனால், இந்த ஃபார்முலாவை உடைத்து, தனி பாதையில் பயணிப்பவர் ஸ்ரீதர் வேம்பு. Zoho என்ற ரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் நிறுவனர் இவரே. ஆம், இவர் கோடீஸ்வரர் தான். ஆனால், இவரது வாழ்க்கை முறை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், இவர் அலுவலகத்திற்கு சைக்கிளில்தான் வருகிறார்!
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, சிறு வயதிலிருந்தே கல்வி கற்பதில் திறமையாக இருந்துள்ளார். IIT நடத்தும் JEE தேர்வில் 27வது இடத்தைப் பிடித்தவர். IIT மெட்ராஸில் படித்தார், பின்னர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஸ்ரீதர் வேம்பு 1994ஆம் ஆண்டில் குவால்காம் நிறுவனத்தில் (Qualcomm) வயர்லெஸ் பொறியாளராக தனது தொழிலைத் தொடங்கினார்.

ஸ்ரீதர் வேம்புவின் தொழில் பயணம்: 1990களில், ஸ்ரீதர் வேம்பு தான் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக Qualcomm நிறுவனத்தில், நல்ல ஊதியம் பெறும் வேலையை விட்டு வெளியேறினார். ஸ்ரீதர் வேம்புவின் சகோதரர்கள் ஏற்கனவே சென்னையில் ஒரு IT நிறுவனத்தைத் தொடங்கினர். 1996 ஆம் ஆண்டு தனது சகோதரர்களுடன் இணைந்து Adventnet என்ற IT நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் தொடங்கப்பட்டபோது டெலிகாம் ப்ரொவைடர்களுக்கு சாப்ட்வேர் விற்பனை செய்யப்பட்டது.
விரைவான வளர்ச்சி: 1998ஆம் ஆண்டில், Adventnet நிறுவனம் 6 கோடி விற்பனையை எட்டியது. அதன்பின் நிறுவனம் தொடர்ந்து முன்னேறத் தொடங்கியது. 2001ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக Adventnet நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 150-இல் இருந்து 3-ஆகக் குறைந்தது. அப்போது 150 கோடிக்கு நிறுவனத்தை வாங்க சிலர் முன்வந்த போதிலும், ஸ்ரீதர் வேம்பு மறுத்துவிட்டார்.
ஸ்ரீதர் வேம்பு சொந்த சம்பளத்தை 4 வருடங்களாக பெறாமல், நிறுவனத்தின் கையிருப்பை தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பயன்படுத்தினார். அந்த நேரத்தில், அவர்கள் Manage Engine என்ற டூலை மிட் சைஸ் நிறுவனங்களுக்காக உருவாக்கினர். இது விரைவில் பிரபலமடைந்து 60 % நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Zoho கார்ப்பரேஷனுக்கு மாற்றம்: ஒரு நிறுவனத்திடம் இருந்து "Zoho" என்ற டொமைன் பெயரை ஸ்ரீதர் வேம்பு வாங்கினார். 2005 ஆம் ஆண்டில், Zoho CRM அறிமுகப்படுத்தப்பட்டது, இது நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 2008 ஆம் ஆண்டிற்குள், Zoho CRM மென்பொருளை 10 லட்சம் பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். 2009 ஆம் ஆண்டில், AdventNet நிறுவனம் Zoho Corporation என்று மறுபெயரிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், Zoho நிறுவனம் 1.2 கோடி பயனர்களைக் கொண்டிருந்ததுடன், ரூ.1,800 கோடி மதிப்பிலான விற்பனை சாதனையையும் எட்டியது.
நவம்பர் 2021ஆம் ஆண்டில், Zoho-வின் வருவாய் 5,230 கோடியை எட்டியது. வருவாயில் பில்லியன் டாலர் நிறுவனமாக மாறியது. கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, Zoho நிறுவனத்தின் வருவாய் 6,711 கோடியாக உயர்ந்தது மற்றும் லாபம் 1,918 கோடியை எட்டியது.
இன்று, Zoho கார்ப்பரேஷன் 2,800 கோடி லாபத்துடன் 8,700 கோடி வருவாய் ஈட்டி, உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மகத்தான வெற்றி மற்றும் நிகர மதிப்பு 28,000 கோடிகள் இருந்தபோதிலும், ஸ்ரீதர் வேம்பு எளிமையான வாழ்க்கை முறையைத் தான் பின்பற்றுகிறார். தனது சொந்த தஞ்சாவூர் கிராமத்தில் தான் இன்னும் வசித்து வருகிறார்.
9,000 கோடி நிறுவனத்தை, எந்த ஒரு வெளி நிதியுதவியும் பெறாமல் அவரது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் சாதித்து காட்டி இருக்கிறார்.
இந்திய தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்பு, சமீபத்தில் தனது எலக்ட்ரிக் ஆட்டோவைக் காட்டி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி 3.75 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், இந்தியாவின் 55வது பணக்காரர் ஸ்ரீதர் வேம்பு. என்னதான் Tata Nexon EV போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருந்தாலும், 10 கிமி தொலைவுக்கு தனது 3 சக்கர வாகனத்தைத் தான் விரும்புகிறார்.
கார், டிரைவர் இல்லாமல், எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வரும் ஸ்ரீதர் வேம்பு, இன்றைய தொழில் துறை முதலாளிகளுக்கு ஒரு முன்மாதிரி என்றே சொல்லலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications