ஹிமாச்சல பிரதேசம்: பிரபல பாலிவுட் நடிகையும் சர்ச்சைக்கு பெயர் போனவருமான கங்கனா ரனாவத் தற்போது பாரதிய ஜனதா சார்பில் மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகிறார்.
பாலிவுட் நடிகை ஆனது முதல் பாஜக வேட்பாளர் வரை கங்கனாவின் வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்…

கங்கனா ரனாவத் என்றாலே பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் நிலவுவது வாடிக்கை. ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் பாம்ப்லா நகரை சேர்ந்தவர் கங்கனா ரனாவத், அவர் 1987ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பிறந்தார்.
இவரை மருத்துவராக்க வேண்டுமென்பது பெற்றோரின் கனவு. ஆனால் கங்கனாவுக்கு இருந்தது வேறு ஒரு கனவு. தன்னுடைய 16 வயதில் தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளியேறி டெல்லிக்கு குடி பெயர்ந்தார். மாடலிங் துறையை தேர்வு செய்தார். இதன் மூலம் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு அனுராக் பாசுவின் கேங்ஸ்டர் திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.
இதனை அடுத்து பல்வேறு படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மக்களின் மனதில் இடம் பிடித்தார், ஃபேஷன், குயின், தனு வெட்ஸ் மனு, ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை மற்றும் தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி என அனைத்து படங்களிலும் திறமையாக நடித்தார்.
இதனால் இந்தியா முழுவதும் கங்கனாவுக்கு ரசிகர்கள் உண்டு. மக்களுக்கு பரவலாக கங்கனாவின் பெயர் தெரிவதற்கு காரணம் அவர் வெளிப்படையான பேச்சுகளாலும் செயல்களாலும் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர்.
கங்கனாவின் சொத்து என வரும் போது மணாலியில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,600 சதுர அடி கொண்ட ஒரு பங்களாவில் வாழ்ந்து வருகிறார். ஏழு படுக்கை அறைகள் கொண்ட இந்த வீட்டில் ஜிம், யோகா மையம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமின்றி மும்பையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு அடுக்குமாடி குடியிருப்பையும் சொந்தமாக்கியுள்ளார்.இவருக்கு சொந்தமாக 35 கோடி மதிப்பில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மெர்சிடிஸ் பென்ஸ் காரும் உள்ளது. 34 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடி காரையும் பயன்படுத்துகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான இவரின் சொத்து மதிப்பு 95 கோடி ரூபாய் ஆகும். இவர் ஒரு திரைப்படத்திற்கு 15 முதல் 27 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். மேலும் விளம்பரங்களுக்கு 3.5 கோடி ரூபாய் வரை கட்டணமாக பெறுகிறார். அதுமட்டுமல்ல கங்கனா, சொந்தமாக மணிகர்னிகா என்ற பெயரில் ஒரு புரொடக்ஷன் கம்பெனியை நடத்தி வருகிறார். அதன் மதிப்பு 48 கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications