விடாமுயற்சி இருந்தால் எதுவும் சாத்தியமே என்று இதற்கு முன்னர் சாதித்துக் காட்டிய பலரின் கதைகள் குறித்து பார்த்தோம். அதேபோல இன்றும் ஒரு கேன்சர் வாரியரை பற்றி தான் பார்க்க உள்ளோம். கேன்சர் தொற்றால் அவதிப்பட்டு இருந்த பெண்மணி அதை தகர்த்தெறிந்து தனக்கென ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதில் நல்ல லாபம் பார்த்து வருகிறார். யார் இந்த பெண்மணி? அவர் என்ன தொழில் செய்கிறார்? எப்படி லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்? என்ற விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
13 வருடங்களுக்கு முன்பு புற்றுநோய், நிதி நெருக்கடி, நிச்சயம் அற்ற வாழ்க்கை என தனது குழந்தைகளோடு போராட்டமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருந்தவர் தான் லவீனா ஜெயின் என்ற பெண்மணி. அனால் கேன்சர் தொற்று அவருடைய இலக்குகளுக்கு தடையாய் அமையவில்லை. பாரம்பரியமாக வீட்டில் தயாரிக்கப்படும் ஊறுகாய்கள், சட்னிகள் என பலவற்றை விற்பதற்காக திரிப்தி ஃபுட்ஸ் என்ற பிராண்டை நிறுவினார். அவருடைய தடுமாற்றங்களை எல்லாம் படிக்கட்டாக மாற்றி ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய லவீனா உணவு தொழிலை தேர்ந்தெடுத்தார்.

லவீனா மற்றும் அவருடைய கணவர் என 2 பேருமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் வசிக்கின்றனர். இந்த தம்பதியினருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட போது பெரும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளனர். ஆனாலும் கடின உழைப்பின் காரணமாக திருப்தி ஃபுட்ஸ்-ஐ நல்ல நிறுவனமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றியுள்ளனர்.
வாழ்க்கையில் இந்த எதிர்பாராத திருப்பம் ஏற்பட்ட பிறகு லவீனா உணவை பதப்படுத்தி வைப்பதற்கான கோர்சில் சேர்ந்தார். அப்போது தான் ஊறுகாய், ஜாம் போன்றவற்றை தயாரிக்கும் போது தான் மகிழ்ச்சியாக இருப்பதை தெரிந்து கொண்டார். ஆரம்ப காலத்தில் ஊறுகாய்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே செய்துள்ளார்.
அனைவரும் இவருடைய ஊறுகாயை பாராட்ட தொடங்கினர். இதனால் தான் இதை ஒரு பிசினஸாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று யோசித்துள்ளார். புற்றுநோய்க்கு பிறகு தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்க உத்தர பிரதேச அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு குறித்த 100 நாள் பயிற்சியை லவீனா எடுத்துக் கொண்டார்.
கிமோதெரபி சிகிச்சை முடிந்த உடனேயே பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல தொடங்கினார் லவீனா. அந்த சமயத்தில் போதுமான எனர்ஜி இல்லாத காரணத்தினால் கடினமான நாட்களையும் எதிர் கொண்டார் லவீனா. ஆனால் இவை எதுவும் அவருடைய இலக்குக்கு தடையாக இருக்கவில்லை.
அந்த நேரத்தில் அவருடைய கணவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. ஆனால் தங்களின் குழந்தைகளுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். மேலும் போதுமான அளவு தொகையும் அப்போது அவர்களிடம் இல்லை. 2011-ஆம் ஆண்டில் திரிப்தி ஃபுட்ஸ் தொடங்குவதற்காக முதலீடாக வெறும் ரூ.1500 மட்டுமே வைத்திருந்தனர்.
முதல் முதலாக எலுமிச்சை ஸ்குவாஷ் போன்ற பொருட்களை மட்டுமே விற்பனை செய்யத் தொடங்கினர். ஆரம்ப நாட்களில் அவருடைய குடும்பத்தினர் லேபில்கள் மற்றும் பழைய கண்ணாடி பாட்டில்களில் பொருட்களை பேக்கிங் செய்ய அவர்களுக்கு உதவினர்.
ஆரம்ப காலத்தில் இந்த ஜோடிக்கு தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வது சவாலாக இருந்தது. இவர்கள் தொழில் தொடங்கிய நேரத்தில் கிட்டி பார்ட்டிகள் என்பது பிரபலமாக இருந்தது. கிட்டி பார்ட்டிகள் என்பது பெண்கள் ஒன்று கூடி கேம் விளையாண்டு சாப்பிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒரு சமூக நிகழ்வு. பெண்களுக்கு மன அழுத்தத்தை தணிப்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வழக்கமாக இருந்தது.
எனவே இது போன்ற பார்ட்டிகள் நடக்கும் இடத்தில் ஸ்டால்களை அமைத்து அங்கு ஹோம் மேட் பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினர். இதன் மூலம் முதன்முதலாக அவருக்கு 2 கிலோ மாங்காய் ஊறுகாய் செய்வதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது. அப்போதுதான் அவருடைய வணிகம் விரிவடைய தொடங்கியது.
தன்னுடைய வணிகம் வளர்ச்சி அடைவதை பார்த்து தன் வீட்டிலேயே ஒரு யூனிட் அமைத்து 8 பெண்களை வேலைக்கு அமர்த்தினார் லவீனா. பழங்கள், காய்கறிகள் என பருவ காலங்களில் கிடைக்கும் பொருட்களை வைத்து உற்பத்தி செய்யத் தொடங்கினார்.
திரிப்தி ஃபுட்ஸ் நிறுவனம் சுமார் 70 வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. உப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களை மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறார் லவீனா. சோடியம் பென்சோயேட் போன்ற பொருட்களை தேவைப்படும் போது மட்டுமே அதுவும் அரசாங்கத்தின் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் பயன்படுத்துகிறார்.
"நாங்கள் என்ன வீட்டில் சாப்பிடுகிறோமோ அதை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். எங்களுடைய குறிக்கோள் மிகவும் எளிமையானது. சரியான தயாரிப்பு.. சரியான விலை.. சரியான தரம். பெரும்பாலான உற்பத்தி கைமுறையாக தான் செய்கிறோம். இயந்திரங்கள் இதே போன்ற விஷயத்தை என்றுமே தராது" என்று கூறுகிறார் லவீனா.
நிறுவனத்திற்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் குடும்பத்திற்கு எப்படி பார்த்து பார்த்து தயாரிக்கின்றனரோ.. அதேபோலவே தான் ஒவ்வொரு பொருளையும் தயாரிப்பதாக கூறுகிறார். அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களை லவீனா வேலைக்கு அமர்த்தியுள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு நிதி சுதந்திரம் கிடைப்பதோடு தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவி வருகிறார்.
திருப்தி புட்ஸ்சில் அதிகம் விற்பனையாகும் ஹிங் ஆச்சார் அவர்களுடைய மொத்த விற்பனையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது அதோடு லீப் ஸ்குவாஷ், ஆப்பிள் மற்றும் கிவி ஜாம்கள், அன்னாசி பழ கிரஷ், ஸ்ட்ராபெரி ஸ்குவாஷ் போன்ற பிற தயாரிப்புகளும் மீண்டும் மீண்டும் ஆர்டர்களை பெற்று வருகிறது.
டெல்லி, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். அமேசான் சந்தையில் அவருடைய ஊறுகாய் ஸ்குவாஸ்கள் இந்தியாவில் உள்ள பல பகுதிகளையும் சென்றடைகிறது. அதோடு காசிபுர், ருத்ராபூர், முசாபர்நகர் போன்ற இடங்களுக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகளில் ஸ்டால்களை அமைத்து உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
ஒரு ஊறுகாய் பாட்டிலுக்கு 100 முதல் 300 ரூபாய் வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2024 ஆம் நிதி ஆண்டில் மட்டும் 39 லட்சம் ரூபாய்க்கு டர்ன் ஓவர் செய்துள்ளார். இனிவரும் நிதியாண்டில் இதை முறியடித்து ரூ.50 லட்சத்திற்கும் மேல் வருமானம் பார்க்க டார்கெட் வைத்துள்ளார். உடல் நிலையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருப்பவர்களே தனித்து நின்று ஒரு செயலை செய்வதற்கு தயங்கிக் கொண்டிருக்கையில் கேன்சர் வந்தும் தன்னை ஒரு நிலையில் நிறுத்த வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் லவீனாவின் விடா முயற்சி பலருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications