பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி அமைக்கவும், தினசரி குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதன்படி மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) இனி Pujya Bapu Gramin Rozgar Yojana என அழைக்கப்படும்.

நாட்டின் பிரதான வேலை வாய்ப்பு திட்டங்களில் ஒன்று தான் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம். கிராமப்புறங்களை சேர்ந்த மக்களுக்கு குறிப்பாக பெரிய அளவில் திறன் இல்லாத மக்களுக்கு ஓர் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பையும் சம்பளத்தையும் உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டது இந்த திட்டம். இந்தியாவின் கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு இது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தற்போது இந்த திட்டதின் பெயர் புஜ்யா பாபு கிராமின் ரோஸ்கர் திட்டம் என மத்திய அரசு மாற்றியுள்ளது. அது தவிர இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது .இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கான குறைந்தபட்ச சம்பளம் 240 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது .
இந்தியாவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் National Rural Employment Guarantee Act 2005 என்ற பெயரில் முதலில் அமல்படுத்தப்பட்டது . பின்னர் அதோடு மகாத்மா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என மாற்றப்பட்டது. இப்போது மோடி அரசு இந்த பெயரை மாற்றி குறைபட்ச சம்பளத்தையும் , குறைந்தபட்ச வேலை நாட்களையும் மாற்றியுள்ளது.

இது தவிர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் Sustainable Harnessing of Advancement of Nuclear Energy for Transforming India எனப்படும் அணுசக்தி மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவின் படி 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணுசக்தி மின் திறனை 100 கிகா வாட்டாக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது . எனவே அணுசக்தி மூலம் மின் உற்பத்தி என்பது இதுநாள் வரை அரசின் வசம் மட்டுமே இருந்த நிலையில் முதன்முறையாக தனியாருக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இதன்படி இரண்டு கட்டமாக 2026 முதல் 2027ஆம் ஆண்டு வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இதற்காக 11,718 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி தந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு நல திட்டங்களை உருவாக்கவும் அரசு கொள்கைகளை வகுக்கவும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications