A2B: ஒரு ஸ்வீட் கடை 'ஆலமரமாக' வளர்ந்த கதை.. 3300 கோடி சாம்ராஜ்ஜியமாக உயர்ந்த அடையார் ஆனந்த பவன்..!!

இந்தியாவில் கோடிக்கணக்காக குடும்ப வர்த்தகங்கள் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது, நீண்ட கால வரலாறு, பாரம்பரியத்தைக் கொண்டது. இத்தகைய நிறுவனம் ஒரு ப்ரோபெஷ்னல் நிதி மற்றும் நிர்வாக கட்டமைப்புக்குள் மாறுவது என்பது அதன் வளர்ச்சிப் பாதையில் மிகவும் முக்கியமான படி.

இத்தகைய வளர்ச்சியைத் தான் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரிந்த அடையார் ஆனந்த பவன் எட்டியுள்ளது. அடையார் ஆனந்த பவன் சாம்ராஜ்ஜியத்தில் 3300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதி ட்ரீ சிஸ்டம்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம் 1700 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

A2B: ஒரு ஸ்வீட் கடை 'ஆலமரமாக' வளர்ந்த கதை.. 3300 கோடி சாம்ராஜ்ஜியமாக உயர்ந்த அடையார் ஆனந்த பவன்..!!

திருப்பதி ராஜா-வின் துவக்கம்..

1960ல் திருப்பதி ராஜா உருவாக்கிய ஒரு ஸ்வீட் ஸ்டால் இன்று 3300 கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியமாக மாறியுள்ளது. திருப்பதி ராஜா தனது ஆரம்பக்கட்டத்தில் ஹோட்டலில் டேபிள் சுத்தம் செய்வது போன்ற பல வேலைகளைச் செய்தார், பின்னாளில் குடும்ப தொழிலிலான விவசாயத்தில் இறங்கினார்.

விவசாயம்..

விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கவே தனது குடும்ப நிலத்திற்கு அருகில் இருக்கும் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி விவசாயம் துவங்கிய போது புயல் காரணமாக பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டார்.

இதை தொடர்ந்து மீண்டும் விவசாயத்தில் முழுநேரமாக இறங்குவது சரியாக இருக்காது என உணர்ந்து ஹோட்டலில் பணியாற்றிய காலத்தில் பெற்ற அனுபவம், படங்களை அடிப்படையாக வைத்து 1960ல் ராஜபாளையத்தில் குரு ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஒரு ஸ்வீட் ஸ்டால் திறந்தார்.

இந்த ஒரு முடிவு தான் 3300 கோடி ரூபாய் மதிப்பிலான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முக்கிய திருப்பமாக இருக்கும் என்பது திருப்பதி ராஜா-வுக்கு அப்போது தெரிந்திருக்காது.

பெங்களூர் விஜயம்..

இதைத் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கவும், புதிய சந்தைக்கு நுழைய வேண்டும் என்ற நோக்குடன் 1970களில் திருப்பதி ராஜா தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகள், இன்று A2B சாம்ராஜ்ஜியத்தின் தலைவர்களான K.T வெங்கடேசன், K.T ஸ்ரீனிவாச ராஜா ஆகியோருடன் பெங்களுருக்கு குடிபெயர்ந்து ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ் என்ற கடையைத் திறந்தார்.

இந்த கடை மூலம் பெரிய வருமானத்தை ஈட்டப்பட்ட நிலையில் K.T வெங்கடேசன், K.T ஸ்ரீனிவாச ராஜா ஆகியோர் பள்ளி கல்வியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய களமிறங்கினர்.

ஒருபக்கம் திருப்பதி ராஜாவும், அவரது மனைவியும் ஸ்வீட் செய்யும் பணிகளை செய்ய, மறுபுறம் K.T வெங்கடேசன், K.T ஸ்ரீனிவாச ராஜா ஆகியோர் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தினர்.

சென்னையில் என்டரி..

இதன் பின்பு பெரிய வளர்ச்சி படியாக, சென்னையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் முதல் ஸ்ரீ ஆனந்த பவன் பெயரில் 1979ல் கடையைத் திறந்தனர்.

இதுவும் வர்த்தகத்தில் கைகொடுக்கவே 1980களில் சென்னையில் 2வது கிளையை அடையாரில் திறந்தது மூலம் வேகமாகப் பிரபலம் அடையத் துவங்கியது, இதன் பின்னர் ஸ்ரீ ஆனந்த பவன் அடையாரில் இருக்கும் காரணத்தால் மக்கள் அனைவரும் அடையார் ஆனந்த பவன் என அழைக்கத் துவங்கிய நிலையில் பின்னாளில் இது பிராண்டாகவே மாறியது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடையார் ஆனந்த பவன் பிரபலமாக இருந்தது. 2001ல் திருப்பதி ராஜா மறைந்த நிலையில், K.T வெங்கடேசன், K.T ஸ்ரீனிவாச ராஜா ஆகியோர் மொத்த நிர்வாகத்தையும் கையில் எடுத்தனர்.

முதல் ஹோட்டல்

பலகார வர்த்தகத்தைத் தாண்டி ஹோட்டல் வர்த்தகத்தில் இறங்க வேண்டும் என முடிவு செய்த வாரிசுகள், முதல் ஹோட்டலை 2005ல் துவங்கி அடையார் ஆனந்த பவன் தயாரிக்கும் பலகாரத்திற்கு புதிய வருவாய் ஈட்டும் வழியைத் துவங்கினர். அதாவது ஹோட்டல் உடன் கூடிய ஸ்வீட் ஸ்டால் மாடலில் உருவாகினர்.

A2B என்ற பிராண்டில் கீழ் ஹோட்டல் துவங்கியது மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைத் தினமும் ஈர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வெற்றி ஹோட்டல் வர்த்தகத்திற்கும் சரி, பலகார வர்த்தகத்திற்கும் பெரியளவில் கை கொடுத்தது.

இதன் பின்பு சென்னை தாண்டி தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதை தொடர்ந்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் என தமிழர்களும், தென்னிந்தியர்களும் அதிகம் வாழும் நாடுகள், பகுதிகள் என குறிவைத்து A2B ஹோட்டல் திறக்கப்பட்டது.

இன்று 185 கிளைகள், 12000 ஊழியர்கள் உடன் 1500 கோடி ரூபாய் அளவில் வருமானம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. கடைசியாக 2025ஆம் நிதியாண்டில் 1502 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈட்டி அடையார் ஆனந்த பவன் இன்று 3300 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உயர்ந்துள்ளது.

போதி ட்ரீ சிஸ்டம்ஸ் மூலம் 1700 கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது மூலம் தற்போது வர்த்தகத்தைப் பெரியளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு வருகின்றனர் K.T வெங்கடேசன், K.T ஸ்ரீனிவாச ராஜா.

ஹோட்டல் அடையாள மாறினாலும், ஸ்வீட் மற்றும் பலகாரம் தான் இவர்களுடைய வர்த்தகத்தின் மையப்பகுதியாக இன்று வரையில் இருந்து வந்தது. மேலும் சமீபத்தில் அடையார் ஆனந்த பவன் நேரடியாக ரீடைல் மக்களைச் சென்றடையும் வகையில் ரீடைல் பாக்கெட்-களை அறிமுகம் செய்து பெரியளவிலான வர்த்தகத்தைப் பார்த்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+