மாலத்தீவு: மாத சம்பளத்தில் வேலைக்கு செல்பவர்கள் அதனை விடுத்து ஒரு தொழில் தொடங்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் இவருடைய கதை உங்களுக்கு ஊக்கம் அளிக்கும். மாலத்தீவின் அசைக்க முடியாத தொழிலதிபராகவும் பணக்காரராகவும் உயர்ந்திருக்கும் காசிம் இப்ராகிம்..
கிளார்க்காக தன்னுடைய வேலையை தொடங்கிய காசிம் இப்ராகிம் இப்போது பல லட்சம் கோடி பணத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறார். மாலத்தீவின் மிகப்பெரிய தொழிலதிபராக இவர் மாறியது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

காசிம் இப்ராஹிம் 1951 ஆம் ஆண்டு மாலத்தீவில் பிறந்தவர். தன்னுடைய 18ஆவது வயதில் மருத்துவமனை ஒன்றில் கிளார்க் பணியில் சேர்ந்தார். தற்போது மாலத்தீவின் பணக்காரர்களில் தவிர்க்க முடியாத நபராக மாறி இருக்கிறார் .1973 ஆம் ஆண்டில் தன்னுடைய கிளார்க் வேலையை விட்ட காசிம் இப்ராகிம் மரச்சாமான்கள் கடையில் மேலாண்மை பணிக்காக சென்றார். அப்போது பகுதி நேரமாக அரசுக்கு சொந்தமான ஒரு வர்த்தக நிறுவனத்திலும் இவர் வேலை செய்து வந்தார்.
அப்போதுதான் அவருக்கு நாம் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம். 1976 ஆம் ஆண்டில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கிய காசிம் அரிசி, டீசல், மண்ணெண்ணெய் மற்றும் புகையிலை ஆகியவற்றைக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கினார். வெளிநாடுகளில் இருந்து அவற்றை மாலத்தீவுக்கு இறக்குமதி செய்வது தான் இவருடைய தொழில்.
படிப்படியாக தொழிலை கற்றுக் கொண்ட காசிம் சுற்றுலா மற்றும் போக்குவரத்து, கட்டுமானம், உற்பத்தி ,எரிவாயு, சிமெண்ட் என பல்வேறு துறைகளிலும் கால் பதிக்க தொடங்கினார். அந்த வகையில் காசிம் இப்ராகிமின் வில்லா ஷிப்பிங் அண்ட் டிரேடிங் கம்பெனி லிமிடெட் மாலத்தீவின் அசைக்க முடியாத ஒரு தொழில் குழுமமாக மாறியது.
இதற்காக எஸ்பிஐ வங்கியில் இருந்து 2000 டாலர்களை கடன் வாங்கினார். தன்னுடைய தொழிலை படிப்படியாக விரிவாக்கம் செய்தார். பழைய படகு ஒன்றினை வாங்கி அதனை சரக்கு கப்பலாக மாற்றிய இவர், சரக்கு போக்குவரத்து , இறக்குமதி ஆகியவற்றிலும் வெற்றிகரமாக செயல்பட தொடங்கினார். 1980களில் மாலத்தீவில் அரசியலிலும் கால் பதித்தார். 1989 ஆம் ஆண்டு மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார்.
காசிம் மற்றும் அவருடைய நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அவை இவருடைய வளர்ச்சியை பாதிக்கவில்லை. 2005 ஆம் ஆண்டில் மாலத்தீவு நாட்டின் மத்திய வங்கி ஆளுநராகவும் இவர் நியமனம் செய்யப்பட்டார். தற்போது காசிம் இப்ராகிமின் குழுமம் 5 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. அவருடைய சொத்து மதிப்பு மாலத்தீவு நாணயத்தில் 9.6 பில்லியன் ஆக இருக்கிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications