நாய்க்குட்டிகளை வாக்கிங் கூட்டிச் சென்று மாதம் ரூ.5.7 லட்சம் வருமானம்! டெக்கியின் டேலண்டை பார்த்தீங்களா?

ஒருவர் மட்டும் சம்பாதிக்கும் குடும்பங்களாக இருந்தால், இன்றைய விலைவாசிக்கு மத்தியில் போராடி தான் வாழ்க்கை நடத்த வேண்டும். ஆனால் ஒரு சைடு பிசினஸை தேர்ந்தெடுத்து விட்டால் ஓரளவு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கலாம். அப்படித்தான் அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் 28 வயதே ஆன சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒரு சைடு பிசினஸை விளையாட்டாக தொடங்கியுள்ளார். ஆனால் அந்த பிசினஸ் தான் இன்று அவருக்கு லட்சங்களில் வருமானத்தைப் பெற்று தருகிறது.

கோபி குட்ஹார்ட் என்ற இளைஞர் 2023-ஆம் ஆண்டில் நியூயார்க் நகருக்குக் குடிபெயர்த்தார். இவர் முழு நேர ஐடி ஊழியர். ஒரு சைட் பிசினஸ் செய்ய வேண்டும் என்று எண்ணிய கோபி, "குட்ஹார்ட் டாக் கோ" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இது முழுக்க முழுக்க நாய் குட்டி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமாகும்.

ஆரம்பத்தில் கோபி இந்த நிறுவனத்திற்காக அதிக அளவில் நேரம் ஒதுக்கவில்லை. அவருடைய அதிகாலை நேரங்கள், மதிய உணவு இடைவேளை மற்றும் மாலை நேரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தார். சில நாட்களில் மக்கள் இவருடைய நிறுவனத்திற்கு தந்த வரவேற்பினால் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கியது. இதனால் அலுவலகத்தில் தான் பிஸியாக இருக்கும் நேரத்தில் குட்ஹார்ட் நிறுவனத்தைப் பார்த்துக் கொள்ள ஒரு உதவியாளரை நியமித்துள்ளார்.

நாய்க்குட்டிகளை வாக்கிங் கூட்டிச் சென்று மாதம் ரூ.5.7 லட்சம் வருமானம்! இப்படி ஒரு பிசினஸா?

அவருக்கும் கோபி தகுந்த பயிற்சிகளை வழங்கியுள்ளார். தற்போது கோபி மற்றும் அவருடைய உதவியாளர் இருவரும் சேர்ந்து 10 முதல் 20 நாய் குட்டிகளை பராமரித்து வருகின்றனர். அதுவும் வார இறுதி நாட்களில் கோபி செம பிசியாக இருப்பார். நாய் குட்டிகளை வாக்கிங் அழைத்துச் செல்வது, வாடிக்கையாளர்களுடன் மீட்டிங் வைப்பது என பல வேலைகள்.

ஏற்கனவே IT-யில் பணிபுரிவதால் இவருக்கு வேலை சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நாய்க்குட்டிகள் என்றால் கோபிக்கு அவ்வளவு பிரியம். இதனால் இந்த வேலை அவருக்கு பாரமாக தெரியவில்லையாம்.

சிலருக்கு தங்களுடைய பெட் என்றால் உயிர். ஆனால் அவற்றை வளர்ப்பதற்கு நேரமில்லாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு கோபியின் சேவை உதவிகரமானதாக மாறியுள்ளது. எந்தெந்த விஷயங்களில் மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து ஒரு பக்காவான பிசினஸை கோபி கண்டுபிடித்துள்ளார்.

கோபியின் பிசினஸ் ஹிட் அடித்ததற்கு காரணம் என்ன என்பதையும் அவரே கூறியுள்ளார். "மௌத் டால்க்" விளம்பரங்களை விட சிறந்த மார்க்கெட்டிங் என்றே சொல்லலாம். ஒரு வாடிக்கையாளர் தாங்கள் பெற்ற சேவை சிறப்பாக இருந்தது என்று பிற நபர்களிடம் கூறுவது. இதுபோன்ற விஷயம் தான் தன் நிறுவனத்தை வளர்த்ததாக கோபி கூறியுள்ளார். அதோடு கோபி ஒரு சூப்பரான விஷயத்தை செய்திருக்கிறார்.

நம்ம ஊர் வாட்ச்மேன்களிடம் சென்று எந்தெந்த அபார்ட்மெண்டில் யார் யார் குடியிருக்கிறார்கள் என்று கேட்டால் அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறிவிடுவார்கள். அதே போல நியூயார்க்கில் இருக்கும் அப்பார்ட்மெண்ட்களுக்கு சென்று யாரெல்லாம் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர்?, அவர்களுக்கு ஏதேனும் சேவை தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. என்று கூறி தனது விசிட்டிங் கார்டையும் கொடுத்துள்ளார்.

தங்களால் முடியாமல் செல்ல பிராணிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசைப்படும் நபர்களுக்கு அவர்களுடைய நாய்க்குட்டியின் உயரம், அதன் குணம் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு குட்டிக்கும் விலைநிர்ணயம் செய்கிறார்.

நாய்க்குட்டிகளின் பராமரிப்புக்கு ஒவ்வொரு மாதமும் கோபிக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறது தெரியுமா? கேட்டால் தலை சுற்றும். ஒவ்வொரு மாதமும் குட் ஹார்ட் நிறுவனத்தின் மூலம் கோபி 6000 டாலர் வரை சம்பாதிக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் ஒவ்வொரு மாதமும் 5.7 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. இப்படியும் ஒரு பிசினஸா இதிலிருந்து லாபம் கிடைக்குமா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதற்கு சரியான திட்டமிடல் முக்கியம். மேலும் சந்தையை ஆராய்ச்சி செய்வது மிக மிக அவசியம். எந்த இடத்தில் எதற்கு தேவை அதிகம் என்பதை தெரிந்து கொண்டால் அந்த தொழிலில் நிச்சயம் இது போன்ற சாதனைகளை செய்யலாம் என்பதை கோபியின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+