நவம்பர் மாதம் முடிவடையவுள்ள நிலையில் டிசம்பர் 1 முதல், அமலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஏற்கனவே விலைவாசி அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அதிகளவிலான செலவுகளை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இது சாமனிய மக்களுக்கு எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்க இருக்கிறோம்.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு கட்டணம்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும், கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு செயல்பாட்டு கட்டணமும் (Processing fee),அதனுடன் வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 99 ரூபாய் செயல்பாட்டு கட்டணமும், அதனுடன் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அறிவிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி அதனி சேமிப்பு கணக்கில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. இது 10 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இது பிஎன்பி கணக்கில் 10 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு, வருடத்திற்கு 2.80% ஆகவும், இதே 10 லட்சம் ரூபாய்க்கு மேலான டெபாசிட்களுக்கு, வருடத்திற்கு 2.85% ஆகவும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
லைஃப் சர்டிபிகேட் கடைசி தேதி
பென்சன் வாங்கும் 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிக்க, ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஜீவன் பிரமான பத்திரம் ஆவணத்தினை சமர்பிக்க வேண்டும். இந்த பத்திரத்தினை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்குள் பென்சன் வாங்குவோர் சமர்பிக்க வேண்டும். இதனை செய்யாவிடில் டிசம்பர் மாதம் முதல் உங்களுக்கு பென்சன் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம்.
தீப்பெட்டி விலை அதிகரிக்கலாம்
தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதனால் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டியின் விலையும் அதிகரிக்கவுள்ளது. இந்த விலை உயர்வானது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த விலை உயர்வானது 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது.
சமையல் எரிவாயு விலை
எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1ம் தேதியன்று மாற்றப்படுவது வழக்கம். ஏற்கெனவே சிலிண்டர் விலை புதிய உச்சங்களை தொட்டுள்ளது. இது வரும் நாட்களில் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 1 மற்றும் 15ம் தேதிகளில் விலையில் திருத்தம் செய்யப்படிருக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications