கஷ்டப்பட்டாவது தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து விட வேண்டும் என்பதே பல பெற்றோரின் கனவாக உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக பீகாரை சேர்ந்த சைக்கிள் பஞ்சர் ரிப்பேர் செய்யும் நபர் தனது பிள்ளைகளை அரசாங்க வேலையில் அமர்த்தி உள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற அதிர்ஷ்டம் மட்டுமே போதாது. கடின உழைப்பு முக்கியம் என்பதை இவர்களுடைய கதை நமக்கு எடுத்து கூறும். யார் இந்த பீகாரை சேர்ந்த நபர்? எப்படி அவர் பிள்ளைகளை நல்ல வேலையில் அமர்த்தினார் என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
மிதுன் ராய், சரண் மாநிலத்தில் உள்ள அஜ்மர்கஞ்ச் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் 74 வயதான சைக்கிள் மெக்கானிக். அவர் தனது வாழ்நாள் முழுவதும், தனது குடும்பத்தை வழிநடத்தவும், தனது குழந்தைகளைப் படிக்க வைக்கவும் அயராது உழைத்தார். பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், அவருடைய வேலையில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அவரது குழந்தைகளை அரசாங்க வேலைகளைப் பெற வைத்தது.

தன் வாழ்க்கையில் நடக்கும் கெட்டவை எதுவும் தன் மகன்களின் வாழ்வில் நடக்கக்கூடாது என்பதே அவருடைய எண்ணம். அவரது கடின உழைப்பும் வாழ்க்கையைப் பற்றிய நல்ல சிந்தனையும் தான் அவருடைய மகன்களில் ஒருவரை அரசாங்க ஊழியராகவும் மற்ற ஒரு மகனை இராணுவ அதிகாரியாகவும் மாற்றியது. ஒரு சில நேரங்களில் இந்த குடும்பத்திற்கு உணவு பற்றாக்குறை, மழைக்காலத்தில் கசியும் கூரையின் காரணமாக செல்லப் பிராணிகளுடன் ஒரே இடத்தில் வாழ்ந்தது என அதிக சிரமங்களை மட்டுமே பார்த்துள்ளனர்.
ஆனாலும் மிதுன் ராய் தனது உழைப்பை மட்டும் கைவிடவில்லை. எப்படியோ தனது பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி விட்டார். அவரது மகன் விக்ரம் பிரசாத் யாதவ் அரசு அதிகாரி மற்றும் மற்றொரு மகன் விகாஸ் பிரசாத் யாதவ் பீகார் காவல்துறையில் இருந்து ராஜினாமா செய்து தற்போது ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
தன் பிள்ளைகள் வெற்றி பெற்றாலும், தன் வேலையில் உறுதியாக இருந்து, சைக்கிள், பைக்குகளை பஞ்சர் செய்து வருகிறார். வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருந்தாலும் விடாது உழைத்து தன் பிள்ளைகளை அரசாங்க வேலைகளை பெறச் செய்துள்ளார்.
மூன்று வேளை சாப்பாடு, உடுத்தத் துணி, தூங்குவதற்கு வீடு என அனைத்தும் இருக்கும் சிலரே புலம்பித் தள்ளும், இந்த காலத்தில் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு, தங்கும் வீட்டிற்கும் சிரமப்பட்டு, படித்து முன்னேறி இன்று நல்ல வேலையில் அமர்ந்திருக்கும், இவரது பிள்ளைகள் இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications