இந்திய ஸ்டார்டப் நிறுவனங்கள் தற்போது கவர்ச்சிகரமான முதலீடுகளை ஈர்க்கும் முதலீட்டு தளங்களாக மாறி வருகின்றன.
இதுவரை பிரபல நடிகைகளாக வலம் வந்த தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள், இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்டப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
அவற்றில் பல strategic investments என்றாலும், நடிகர்கள், நிறுவனங்களின் புரோமோட்டர்களாகவும், மார்க்கெட்டிங் மற்றும் பி ஆர் ஆகியவற்றிற்கு ஈடாக முதலீடுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

தீபிகா படுகோன் முதலீடு
மிகப்பெரிய ஸ்டார்டப் நிறுவனங்களில் முதலீடுகள் பல இருந்தாலும், தற்போது பல முன்னணி நடிக்கைகளும், அதில் சவால் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதில் முதலில் நம் லிஸ்டில் இருப்பது தீபிகா படுகோன். இவர் கடந்த ஆண்டிலேயே யோகர்ட் நிறுவனமான எபிகாமியாவில் (Epigamia) முதலீட்டினை செய்தார். இதனையடுத்து அண்மையில் கற்றல் மற்றும் சமூக தளமான FrontRowவில் முதலீடு செய்தார்.

ஆலியா பட் எதில் முதலீடு
ஆலியா பட் சமீபத்தில் அழகு இ-தளமான நைகாவில் முதலீடு செய்துள்ளார். எனினும் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்ற விவரங்கள் தெரியப்படவில்லை. கடந்த மே மாதத்தில் இந்த பரிவர்த்தனையானது இரண்டாம் நிலை பரிவர்த்தனை மூலம் முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நைகா நிறுவனம் ஸ்டீட்வியூ கேப்பிட்டல் (Steadview Capital) மூலம் 100 கோடி ரூபாய் முதலீட்டினை திரட்டியதாக கூறப்படுகிறது.

கத்ரீனா கைஃப் – எதில் முதலீடு
முன்னணி பாலிவுட் நட்சத்திரமான கத்ரீனா கைஃப்பும் நைகாவில் முதலீடு செய்துள்ளார். இவரும் நேரிடையாக முதலீடு செய்யாமல், இரண்டாம் நிலை பரிவர்த்தனை மூலம் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதோடு கே பியூட்டி நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளதாக பிசினஸ் இன்சைடரில் வெளியான செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கைஃப் கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் முதலீடு
தென் இந்தியா படங்கள் முதல் பாலிவுட் வரையில் தனது நடிப்பின் திறமையை காட்டி வரும் காஜல் அகர்வால், கண்ணை கவரும் அழகான நடிகையாக மட்டுமே இவரை அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் Okie Gaming நிறுவனத்தில் முதலீட்டாளராக முதலீடு செய்துள்ளார். நாட்டில் டிஜிட்டல் வேகம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டிஜிட்டல் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வருகின்றது. ஆக இது சரியான நேரம் தான். நான் எப்போதும் ஆர்வமுள்ள விளையாட்டாளர். மேலும் இந்தியாவில் பெண்கள் விளையாளாட்டாளர்களாக மாற இது வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன் என்று காஜல் கூறியிருந்தது குறிப்பிடததக்கது.

உலக அழகி ஐஷ்வர்யா பச்சன்
முன்னணி பாலிவிட் நடிகையான ஐஷ்வர்யா ராய் பச்சன் தனது தாயார் விருந்தாவுடன் சேர்ந்து கடந்த ஆண்டில் ஏஞ்சல் முதலீட்டாளராக அறிமுகமானார். சுற்றுசூழல் சம்பந்தமான ஸ்டார்டப் நிறுவனமான ஆம்பியில் அவர்கள் முதலீடு செய்துள்ளனர். இது தரவுகளுடன் காற்றின் தரத்தினையும் காண்கானிக்கிறது. இது ஏற்கனவே ஐடி நகரமான பெங்களூரில் 100 சென்சார்களை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தி நடினை மலைகா அரோரா
இந்தியாவின் முன்னணி இந்தி நடிகையான மலைகா அரோரா, கடந்த 2012 முதலேயே ஸ்டார்டப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். Fashionista ஆன்லைன் பிரீமியம் சில்லறை தொடக்கத்துடன் தொடர்புடையது. இது உயர்தர ஆடை, ஆபரணங்கள் மற்றும் வீட்டு அலகார பொருட்களை வழங்குகிறது. இது இந்தியாவின் சிறந்த வடிவமைப்பாளர்களையும், படைப்பாளர்களையும் கொண்டுள்ளது.

லிஸ்டில் பிரியங்கா சோப்ராவும் உண்டு
சோஷியல் நெட்வோர்கிங் மற்றும் டேட்டிங் ஆப்பான Bumbleலை முன்னணி பாலிவுட் நடிகையும், தொழிலதிபருமான பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆதரிக்கிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டிலேயே பம்பிளில் முதலீடு செய்திருந்தார். அதன் பிறகு இந்த ஸ்டார்டப் நிறுவனமானது இந்தியாவுக்குள் நுழைந்தது. பம்பளின் தாய் நிறுவனமான மேஜிக் லேப்ஸ் அமெரிக்காவால் கையகப்படுத்தப்பட்டாலும், சோப்ராவிடம் இருந்த பங்கு வாங்கப்பட்டதாக என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் சோப்ரா தொடர்ந்து அதன் பிராண்டிங் பணிகளில் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.

நடிகை ஷில்பா செட்டி
நடிகை ஷில்பா செட்டியை நிச்சயம் இந்தியாவில் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. இவர் நடிகை மட்டும் அல்ல, தயாரிப்பாளர், முதலீட்டாளர் உள்ளிட்ட பல பதவிகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். ஷில்பா செட்டியும், நடிகரி யோகியும் இணைந்து எஃப்எம்சிஜி ஸ்டார்டப் நிறுவனமான Mamaearthல் 1.6 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்த ஸ்டார்டப் நிறுவனம் தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இது வருண் மற்றும் கசல் அலாக் ஆகியோரால் கடந்த 2015ம் ஆண்டில் நிறுவப்பட்டது.