மும்பை: தற்போது டிஜிட்டல் யுகத்தில் நாம் பெருமளவில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறிவிட்டோம். கையில் பணத்தை வைத்து கொண்டு செலவு செய்வது குறைந்துவிட்டது. இருந்தாலும் புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளும் அதன் வாசனையும் பிரத்யேக உணர்வை தரக்கூடியவை. பொதுவாக ரூபாய் நோட்டுகள் எப்படி அச்சிடப்படுகின்றன, அது எப்படி மக்கள் கைகளில் புழக்கத்திற்கு வருகிறது என பார்க்கலாம்.
இந்தியாவில் ரூபாய் நோட்டு அச்சிடுதல் மற்றும் புழக்கத்தை தீர்மானிக்கும் அமைப்பாக இந்திய ரிசர்வ் வங்கி இருக்கிறது. அந்த வகையில் ரூபாய் நோட்டுகளை வடிவமைக்கும் பொறுப்பு இந்திய ரிசர்வ் வங்கியிடமே உள்ளது.

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை வடிவமைப்பு செய்து அவற்றை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். மத்திய அரசு இந்த வடிவங்களை ஆய்வு செய்து ரூபாய் நோட்டு ஏற்படையதா மக்கள் புழக்கத்திற்கு உகந்ததா என முடிவு செய்யும். மத்திய அரசு அனுமதி தந்த உடன் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கியால் அனுப்பி வைக்கப்படும்.
மத்திய அரசுக்கு சொந்தமான செக்யூரிட்டி ப்ரிண்டிங் அண்ட் மிண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(Security Printing and Minting Corporation of India Limited) அமைப்பு மட்டுமே இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான உரிமம் கொண்டிருக்கக்கூடிய அமைப்பு ஆகும்.
அந்த வகையில் மத்திய அரசு ரூபாய் நோட்டுகளுக்கான அனுமதி தந்தவுடன் ரிசர்வ் வங்கி அவற்றை எந்த எண்ணிக்கையில் அச்சிட வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களோடு அச்சிடும் அமைப்பிற்கு அனுப்பி வைக்கும்.
நோட்டுகள் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு இதனை அனுப்பி வைக்கும். ரிசர்வ் வங்கியில் the issues office என்ற பிரிவு இதற்காகவே செயல்படுகிறது. அச்சகத்தில் இருந்து வரும் பணத்தை இது currency chest எனப்படும் பிரத்யேக கிடங்கில் சேமிக்கிறது. பின்னர் இங்கிருந்து , ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய வங்கிகளுக்கு அனுப்பி வைக்கிறது.
பின்னர் வங்கிகளிடம் இருந்து சாமானிய மக்களின் கைகளுக்கு இந்த பணமானது சென்று சேர்கிறது. அதாவது வங்கிகளில் இருந்து கடன் வழங்குவது, அல்லது ஏடிஎம் இயந்திரங்கள் வழியாகவோ இந்த பணமானது மக்கள் கைகளுக்கு வந்து சேர்கிறது. இவ்வாறு வரக்கூடிய ரூபாய் நோட்டுகளை மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்றனர்.
அவை சேதமடைந்தால் மக்கள் மீண்டும் இவற்றை வங்கியிலேயே மாற்றிக் கொள்ளலாம். வங்கிகள் இவற்றை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே அனுப்பி விடுகின்றன.
இந்தியாவில் முதல்முறையாக ஒரு ரூபாய் நோட்டுதான் புழக்கத்திற்கு வந்தது. 1917 ஆம் ஆண்டு இது அச்சிடப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இது இந்தியாவில் அச்சிடப்படவில்லை இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்து புழக்கத்தில் விடப்பட்டது.
Story written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications