மரத்தடியில் ஆரம்பித்த தொழில்! இன்று ரூ.414 கோடி நிறுவனமான அதிசயம்! தந்தை கனவை நிறைவேற்றிய மகன்!

தேவையில்லை என்று தூக்கிப் போடப்படும் பொருட்களை வைத்து ஒரு நிறுவனத்தை அமைத்து அதில் வெற்றி கண்டோர் பலர். அப்படிப்பட்ட ஒருவரை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம். 1981-ஆம் ஆண்டில் கேகே. ஜுன்ஜுன்வாலா கரும்பு கழிவுகளின் மூலம் காகித ஆலையை அமைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். ஏனெனில் அப்போதே ஜுன்ஜுன்வாலாவின் தந்தை கரும்பு ஆலையை அமைத்து வணிகம் செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தனது தந்தையை பார்த்தே வளர்ந்த ஜுன்ஜுன்வாலா அதில் உருவாகும் கழிவுகள் மற்றும் அதன் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். கரும்பு கழிவுகளில் இருந்து பேப்பர் தயாரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியிருந்தாலும், அதற்கு இயந்திரங்கள் வாங்குவதற்கு தேவையான நிதி அவரிடம் இல்லை. அப்போது அவருடைய மனைவி தேவைப்படும் இயந்திரங்களை வாங்குவதற்கு தனது நகைகளை கொடுத்துள்ளார். அப்படி தனது மனைவியின் நகைகளை விற்று ஆரம்பித்த நிறுவனம் தான் "யாஷ் பேப்பர்ஸ்"

 மரத்தடியில் ஆரம்பித்த தொழில்! இன்று ரூ.414 கோடி நிறுவனமான அதிசயம்! தந்தை கனவை நிறைவேற்றிய மகன்!

ஒரு சிறிய பேப்பர் மில்லாக நிறுவனத்தை தொடங்கினார் கேகே. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். 90-களில் நடுப்பகுதியில் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு கேகே-வுக்கு, தனது பிசினஸ்-இல் சரிவர பயணிக்க முடியவில்லை. எனவே தனது தொழிலை தனது மகன்களிடம் ஒப்படைக்க ஆசைப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவருடைய இரண்டு மகன்களுக்கும் இந்த தொழிலில் ஆர்வமில்லை. மூத்த மகனான வேத் கிருஷ்ணா தனது தந்தையின் தொழில் முனைவோர் போராட்டங்களை பார்த்தே வளர்ந்ததனால் குடும்ப தொழிலில் சேர ஆர்வம் காட்டவில்லை. மற்றொரு காரணம் அந்த நேரத்தில் அவர் லண்டனில் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படித்துக் கொண்டிருந்தார்.

தனது இரண்டு மகன்களுக்கும் தனது தொழிலில் ஆர்வம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட கேகே 1998-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டில் தன்னுடைய வணிகத்தை வேறொருவருக்கு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார். அவருடைய முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. பின்னர் மூத்த மகனான வேத் கிருஷ்னா இந்தியாவுக்கு திரும்பிய போது தனது தந்தையின் தொழிலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

1999-ஆம் ஆண்டு வேத் லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய போது நிறுவனம் அவ்வளவு நன்றாக செயல்படவில்லை. வருவாய் வீழ்ச்சி அடைந்திருந்தது, செயல்பாடுகள் குறித்து வேத் கிருஷ்ணாவுக்கு குழப்பங்கள் இருந்தன. மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் மனநிலையும் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார். இதனால் தனது வியாபாரம் சரிந்து விடுமோ என்ற அச்சமும் எழுந்தது. அதிலிருந்து இரண்டு முதல் மூன்று நாட்கள் நேரம் எடுத்துக்கொண்டு.. எந்தெந்த விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும் என்று கவனித்திருக்கிறார்.

அதன் பிறகு தனது நிறுவனத்தில் சர்க்கரையை பாக்கெட் செய்வதற்கான பொட்டலங்கள் முதல் மெக்டொனால்ட் ராப்பர்கள் வரை உணவு மற்றும் மருந்து தொழில்களுக்கான காகிதங்களையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. தொடர்ந்து நிறுவனம் வளர்ந்து வந்து கொண்டிருக்கையில் வேத் தனது தந்தையை இழந்தார். இதனால் 2010-ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடலாம் என்றும் யோசித்துள்ளார். அதன் பிறகு படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

2014-ஆம் ஆண்டில் உணவு பேக்கேஜிங் மற்றும் சேவை பிரிவுகளிலும் பணியாற்ற முடிவு செய்து, அதோடு பேக்கேஜிங்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடிவு செய்திருக்கிறார். இதனால் நிறுவனம் மக்கும் பேக்கேஜிங் தயாரிப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது மற்றும் CHUK என்ற பிராண்டையும் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு கரும்பு கழிவுகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை வைத்து மக்கும் பேக்கேஜ்களை தயார் செய்தனர்.

இன்று ஹல்டிராம்ஸ், ரெபெல் ஃபுட்ஸ் மற்றும் கஃபே காபி டே போன்ற பிராண்டுகள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன. விடாமுயற்சியுடன் உழைத்துக் கொண்டிருந்த வேத் தனது நோக்கத்தை புதுமையான வழியில் செலுத்தினார். இதன் காரணமாக 2018-ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் டர்ன்ஓவர் ரூ.200 கோடியாக அதிகரித்தது.

2019 ஆம் ஆண்டில் ஐந்த நிறுவனம் யாஷ் பேப்பர் சென்ற பெயரிலிருந்து பக்கா லிமிடெட் என்ற பெயருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று தனது எம்டி பதவியில் இருந்து விலகி சிஇஓவாக இருக்கிறார் வேத் கிருஷ்ணா.

ஆரம்பகால போராட்டங்கள், தொழிற்சங்க பிரச்சனைகள், நிதி இழப்புகள் என அனைத்தும் இருந்த போதிலும் வேத் கிருஷ்ணா தொடர்ந்து தனது நிறுவனத்தை சீராக வளர்த்து வந்ததால் இன்று.. அதாவது 43 ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தடியில் எளிய முறையில் தொடங்கப்பட்ட நிறுவனம் "பக்கா லிமிடெட்" என்ற பெயரில் ரூ.414 கோடி டர்ன் ஓவர் செய்யக்கூடிய பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+