தற்போது பணி இடங்களில் டிரண்டுகளுக்கு ஏற்ப புதுப்புது வார்த்தைகள் உருவாகி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ட்ரை புரமோஷன், காஃபி பேட்ஜிங் என ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயங்களுக்கு புது புது பெயர்களை சூட்டியுள்ளனர்.
தற்போது சர்வதேச அளவில் பணியிடங்களில் மற்றும் வேலை சார்ந்து பயன்படுத்தக்கூடிய புதிய வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..

ட்ரை புரமோஷன்(DRY PROMOTION): ஊழியர்களுக்கு பதவி உயர்வு மட்டும் தந்து விட்டு அதற்குரிய ஊதிய உயர்வை தராமல் தவிர்ப்பது. உங்களது பதவி உயர்ந்திருக்கும் ஆனால் அதற்கேற்றபடி ஊதியம் உயர்ந்திருக்காது.
ரீசெண்டீயிசம் (RESENTEEISM): ஒரு பணியிடத்தில் வேலை செய்யக்கூடிய பணியாளர்கள் தங்களது பணிச் சூழலில் திருப்தி இல்லாமல் இருப்பது. இதன் காரணமாக வேலை செய்யும் இடத்தில் ஆக்டிவாக இல்லாமல், மற்றவரோடு கலந்து கொள்ளாமல் இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் நம்மை சரியாக நடத்தவில்லை நமது வேலைக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை இதனால் என்னுடைய சொந்த வாழ்க்கையும் என்னால் சரிவர பார்க்க முடியவில்லை என ஒரு பணியாளர் அதிருப்தி நிலையில் இருப்பதே இப்படி அழைக்கப்படுகிறது.
காபி பேட்சிங்(COFFEE BADGING): அண்மைக்காலமாக பரவலாக பயன்படுத்துப்பட்டு வரக்கூடிய ஒரு வார்த்தையாக இருக்கிறது . இதற்கு அர்த்தம் ஒரு நிறுவனத்தில் பணி செய்யக்கூடிய ஊழியர்கள் அங்கே உயர் மட்ட அளவில் இருக்கும் அதிகாரிகளோடு ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்த முயற்சிப்பது. இதற்காக அவர்களுடன் காபி குடிக்க அழைத்துச் செல்வது , உணவு உண்பது என நெட்வொர்க்கிங் செய்வது. இதன் மூலம் தங்களது பணியில் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும் என இந்த நவீன யுகத்தை சேர்ந்த ஊழியர்கள் நினைக்கின்றார்களாம்.
பிளக்ஸிபில் ஃபீடலிட்டி(FLEXIBLE FIDELITY): தற்போது பல்வேறு நிறுவனங்களும் ஹைபிரிட் வேலை முறையை கொண்டு வந்துள்ளன. அதாவது வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வருவது, குறிப்பிட்ட நாட்கள் வீட்டிலிருந்தே பணி செய்வது.
ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்தாலும் கூட அந்த குறிப்பிட்ட வேலைக்கான தங்களுடைய அந்த பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதையே நிறுவனங்கள் பிளக்ஸிபில் ஃபீடலிட்டி என அழைக்கின்றன. நீங்கள் எங்கிருந்து வேண்டாலும் பணி செய்யுங்கள் ஆனால் அந்த வேலைக்குரிய மரியாதையும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த வேலையை முடிப்பதையும் உறுதி செய்யுங்கள் என்பதை தான் இதன் அர்த்தம்.
ஆஃபிஸ் பீக்காக்கிங் (OFFICE PEACOCKING): வீட்டிலிருந்து பணிபுரிய விரும்பும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வழைக்கவும், நீண்ட நேரம் அவர்கள் வேலை செய்வதற்கான ஒரு சூழலை அலுவலகத்தில் கொண்டு வரவும் நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியே இவ்வாறு அழைக்கப்படுகிறது. அலுவலகங்களை அழகாக்குவது அல்லது பசுமையான ஒரு தோற்றத்திற்கு கொண்டு செல்வது, வீட்டில் இருப்பது போன்ற ஒரு சூழலையே கொண்டு வருவது என அலுவலகத்தை ஊழியர்களுக்கு ஏற்ப மாற்றி அமைப்பது ஆபீஸ் பீக்காக்கிங் எனப்படுகிறது.
டிஜிட்டல் நோமேடிஸம்(DIGITAL NOMADISM): ஊர் சுற்றிக்கொண்டே தங்களது வேலையை பார்ப்பது. அதாவது பல்வேறு இடங்களுக்கு சென்று புதுப்புது விஷயங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் ரிமோட் வேலைகளை தேர்வு செய்து கொள்கிறார்கள். இதன்படி அவர்களால் அவர்கள் நினைத்த ஊருக்கு டிராவல் செய்ய முடிகிறது அந்த இடத்திலிருந்து தங்களுடைய வேலையை செய்து சம்பாதிக்கவும் முடிகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications