வெறும் ரூ. 1500 ரூபாய் மாத சம்பளத்தை ரூ. 3 கோடியாக மாற்றிய நபர்.. அடேங்கப்பா! இதுதான் வளர்ச்சி!

மும்பை: தைரியம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு ஆகியவை ஒருவரை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதற்கு அஷ்ஃபாக் சுனாவாலா என்ற நபர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 2004-ஆம் ஆண்டில் சில்லறை விற்பனைக் கடையில் வேலை செய்து மாதம் 1,500 ரூபாயை சம்பளமாகப் பெற்ற இவர், தற்போது ஒரு வருடத்திற்கு ரூ.36 கோடி சம்பாதிக்கிறார். அப்படியானால் மாதத்திற்கு ரூ.3 கோடி ரூபாய். இவருடைய சுவாரசிய பயணத்தை இந்தக் கட்டுரையில் காண்போம்.

அஷ்ஃபாக் சுனாவாலா தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக பத்தாம் வகுப்பிற்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டார். படிப்பை பாதியில் நிறுத்திய அஷ்ஃபாக் சுனாவாலாக்கு 2004-இல் ஒரு விற்பனைக் கடையில் உதவியாளராக வேலை கிடைத்தது. இருப்பினும் அவரது லட்சியங்கள் புதிய விஷயங்களை முயற்சிக்க அவரைத் தூண்டியுள்ளது.

 வெறும் ரூ. 1500 ரூபாய் மாத சம்பளத்தை ரூ. 3 கோடியாக மாற்றிய நபர்.. அடேங்கப்பா! இதுதான் வளர்ச்சி!

ஏறக்குறைய 10 ஆண்டுகளாக, ஒரு சிறந்த வாய்ப்பைத் தேடி பல வேலைகளுக்கு மாறியுள்ளார். இறுதியில் ஆடை மற்றும் தோல் பராமரிப்புக் கடையின் மேலாளர் ஆனார். அனால் அதன் பின்னும், புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவரால் மாற்ற முடியவில்லை. அவரது உள்ளுணர்வு அவரை உயர்ந்த இலக்கை நோக்கி ஓட தூண்டியுள்ளது.

2013-ஆம் ஆண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட (ride-hailing app) ரைட்-ஹெய்லிங் செயலியின் விளம்பரத்தை அஷ்ஃபாக் சுனாவாலா பார்த்துள்ளார். அந்த செயலி விரைவாக பிரபலமடைந்தது. அதனால் அஷ்ஃபாக் சுனாவாலா பகுதிநேர டிரைவராக சேர்ந்துள்ளார். அப்போது நிறுவனத்தின் சிறப்புத் திட்டத்தின் மூலம் மலிவான விலையில் ஒரு சிறிய காரை வாங்கியுள்ளார்.

சுனாவாலா அவருடைய 2 வேலைகளையும் ஆரம்பத்தில் சமமாக செய்துள்ளார். காலை 7 மணி முதல் சில மணி நேரம் வாகனம் ஓட்டியுள்ளார். பின்னர் மீதமுள்ள நேரத்தில் கடைக்குச் செல்வது மற்றும் இரவில் சிறிது நேரம் மீண்டும் கேப் ஓட்டுவது என்று இருந்துள்ளார். இதன் மூலம் அவரது வருமானம் அதிகரித்தது. அவர் கடையில் இருந்து ரூ 35,000 மற்றும் ஒரு டிரைவராக மாதம் ரூ .15,000 சம்பாதித்துள்ளார்.

சுனாவாலாவின் இந்த வெற்றிக்கான பாதைக்கு அவரது சகோதரியும் ஒரு காரணம். அவரின் சகோதரி 2வது காரை வாங்க உதவியுள்ளார். இரண்டு கார்களின் வருமானம் அதிகரிக்கவே, இதனை உணர்ந்த சுனாவாலா மேலும் 3 கார்களை வாங்க ரூ.10 லட்சத்திற்கு வங்கியில் லோன் பெற விண்ணப்பித்துள்ளார். அவரது கடன் அனுமதிக்கப்பட்ட பிறகு, கார்களை வாங்கி, சில ஓட்டுநர்களை வேலைக்கு சேர்த்துள்ளார்.

தொடர்ந்து EMI செலுத்திய பிறகு, மீதமுள்ள தொகையை சேமித்து மீண்டும் கார்களை வாங்குவதில் முதலீடு செய்துள்ளார். மீண்டும் லோன் எடுத்து நிறைய கார்களை வாங்கியுள்ளார். இது காலப்போக்கில் 400 கார்கள் என்ற இலக்கை எட்டியது.

அவரிடம் பணிபுரிந்த ஊழியர்கள் வேலையை விட்டு செல்வது, ஊழியர்களின் தவறான நடத்தை மற்றும் ஊழியர்கள் வேலையில் பொறுப்புணர்வு இன்றி இருந்தார்கள். இந்த கடினமான சிக்கல்கள் அவரது வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக 1500 ரூபாய் பெற்ற மாத சம்பளத்தை தற்போது வருடத்திற்கு ரூ. 36 கோடி என்ற மாபெரும் இலக்கை எட்டியுள்ளார்

ஆனால் என்னதான் பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் 500 கார்களை எட்டுவதே தன்னுடைய இலக்கு என்று சுனாவாலா கூறியுள்ளார். பிரச்சினைகளைக் கண்டு மனம் தளர்ந்து, அடுத்த முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கும் பலருக்கும் இவருடைய பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+