தந்தை சேர்த்து வைத்த சொத்துகளின்றி தாமாக உழைத்து முன்னேறும் ஒவ்வொருவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள் தான். அப்படி பல கதைகள் நம் நாட்டில் இருக்கிறது. ஒன்றுமே இல்லாமல் சுயமாக குறைந்த முதலீட்டில் தொடங்கி கடின உழைப்பின் காரணமாக மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய பல தொழில் முனைவோர்கள் உள்ளனர். அப்படி ஒருவர் தான் கைலாஷ் கட்கர். இவர் இந்தியாவின் முன்னணி சைபர் செக்யூரிட்டி நிறுவனமான "குவிக் ஹீலின்" நிறுவனர் ஆவார். தற்போது இந்த நிறுவனம் ரூ.1,40,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறது.
கைலாஷ் கட்கரின் இந்தக் கனவு ஒரே நாளில் நிறைவேறவில்லை. இதற்கு முன்னர் அவர் பல்வேறு கஷ்டங்களைப் பார்த்துள்ளார். மகாராஷ்டிராவின் ரஹிமத்பூரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த கைலாஷ் 9-ஆம் வகுப்புக்கு மேல் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். 9-ஆம் வகுப்புடன் கல்வியை தொடர முடியவில்லை என்பதால் வேலைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

ஏனெனில் எந்த வேலைக்கு செல்ல வேண்டுமானாலும் பட்டப்படிப்பு முக்கியம் என்ற நிலை உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் பள்ளி படிப்பையே முடிக்காமல் ஒருவர் வேலைக்கு செல்ல எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படிதான் கைலாஷின் நிலையும் இருந்தது. ஆனால் நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவில்லை. ரேடியோ மற்றும் கால்குலேட்டர்களைப் பழுதுபார்க்கும் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு மாத சம்பளமாக 400 ரூபாய் வழங்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டில் கைலாஷ் புனேவில் 15,000 ரூபாய் முதலீட்டில் தனது சொந்த கடையைத் திறந்தார்.
கைலாஷின் சகோதரர் தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது படிப்பைத் தொடர சிரமப்பட்டார். அப்போது கைலாஷ் தான் அவருடைய சகோதரர் உயர்கல்வி படிப்பைத் தொடர வேண்டும் என்று வற்புறுத்தினார். கணினி அறிவியல் படிப்பதற்காக தனது சகோதரரின் 5000 ரூபாய் கட்டணத்தை செலுத்துவதற்காக அயராது உழைத்தார். இதற்கிடையில் எதிர்காலம் கணினியின் மூலம் தான் இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட கைலாஷ், தனது 22 வயதில் முதல்முறையாக கணினிக்காக 50,000 முதலீடு செய்து ஒன்றை வாங்கினார். 1993-ஆம் ஆண்டில் கைலாஷ் "சிஏடி கம்ப்யூட்டர் சர்வீசஸ்" என்ற நிறுவனத்தை நிறுவினார். இங்கு கணினிகளை பழுது பார்க்கும் மற்றும் சர்வீஸ் செய்யும் சேவைகளை வழங்கி வந்தார்.
தனது கடையை திறந்த பிறகு பழுது பார்க்க வந்த பெரும்பாலான கணினிகளில் வைரஸ் தாக்குதல்கள் ஏற்பட்டிருப்பதை தெரிந்து கொண்டார். எனவே தனது இளைய சகோதரரை வைரஸ் தடுப்பு தொடர்பாக தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். கைலாஷ் மற்றும் சஞ்சய் இருவரும் இணைந்து தங்கள் பழுது பார்க்கும் கடையில் வைரஸை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
படிப்படியாக இந்த இரண்டு சகோதரர்களும் தங்களுடைய கவனத்தை ஹார்டுவேர் ரிப்பேரிலிருந்து ஆன்டிவைரஸ் சாப்ட்வேருக்கு மாற்றத் தொடங்கினர். இதனால் 1995-ஆம் ஆண்டில் முதன்முதலாக "குயிக் ஹீல்" என்ற தயாரிப்பை 700 ரூபாய்க்கு அறிமுகம் செய்தனர். இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அப்போது சில கடினமான நேரங்களையும் எதிர்கொண்டனர். ஆனால் இதிலிருந்து எப்படியாவது மேலே வர வேண்டும் என்று முயற்சியோடு போராட தொடங்கினார். அப்போது கைலாஷ் கட்கர் நிறுவனத்தின் MD மற்றும் சிஇஓ ஆனார். 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி நிறுவனம் 1,40,000 கோடிக்கு மேல் நிகர மதிப்பை கொண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications