இன்ஜினியரிங் படித்துவிட்டு பெருநிறுவன வேலையில் இருந்த ஒருவர் இன்று இந்தியாவின் முதல் அத்திப்பழ ஜாம் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான எண்ணம் என்றால் எதாவது சாதிக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருக்கையில் எங்கு தொடங்குவது? எதை செய்வது? என்ற பல்வேறு குழப்பங்கள் அவ்வப்போது வந்து போகும். அதை எல்லாம் தகர்த் தெறிந்து நடப்பது நடக்கட்டும்.. என்ற சிந்தனையில் ஓடுபவர்களே இங்கு சாதனையாளர்களாக உயர்கின்றனர்.
அப்படித்தான் புனேவைச் சேர்ந்த 30 வயதான சமீர் டோம்பே முழுக்க முழுக்க கெமிக்கல் இல்லாத அத்திப்பழ ஜாமை உற்பத்தி செய்ய ஒரு பிராண்டை உருவாக்கியுள்ளார். பெரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சமீர் தனது வேலையை விடுத்து அத்திப்பழ ஜாம் தயாரிப்பாளராக மாற முடிவு செய்தார். இதனால் 2014-ஆம் ஆண்டில் புனேவில் விவசாயம் செய்யத் தொடங்கினார்.

2018 ஆம் ஆண்டில் அவர் "பவித்ரக்" என்ற பிராண்டை தொடங்கினார். இந்த பிராண்ட் முழுக்க முழுக்க ஆர்கானிக் மற்றும் ரசாயனம் இல்லாத அத்திப்பழ ஜாம்களை உற்பத்தி செய்வதற்காகவே தொடங்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான அத்திப்பழ ஜாம்கள் பிற ஊர்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
எனவே இதையே வணிகமாக மாற்ற சமீர் முடிவு செய்தார். பவித்ரக் பிராண்டின் அத்திப்பழ ஜாம்கள் 12 மாதங்கள் வரை நீடிக்கும் தரம் கொண்டது. ஆரம்பகட்டத்தில் நீர் பாசனம் முதல் சப்ளை செய்வது வரை பல போராட்டங்கள் இருந்தாலும் தனது முயற்சியில் தொடர்ந்து உழைக்க சமீர் முடிவு செய்தார். வேலையை விட்டு வெளியேறியதற்காக பல விமர்சனங்களுக்கு ஆளான போதிலும் தன்னம்பிக்கையை மட்டும் சமீர் இழக்கவில்லை.
சமீரின் வெற்றிக்கு என்ன காரணம்?: சமீர் தொழில்நுட்பப் பின்னணி கொண்ட ஒரு விவசாயி. இவருடைய புதுமையான கண்ணோட்டம் அவருடைய தொழிலுக்கு இன்னும் உத்வேகம் அளித்தது. ஒவ்வொரு தயாரிப்பும் கவனமாக தயாரிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்வதிலேயே தனது கவனத்தை சமீர் செலுத்தியுள்ளார். ஆரம்பத்தில் அனைத்து தொழில் முனைவோருக்கும் இருக்கும் போராட்டங்களைப் போலவே இவருக்கும் பிரச்சனைகள் இருந்தது. ஆனால் அதை எல்லாம் ஒரு அனுபவமாக மாற்றி தனது தொழிலில் கடின உழைப்போடு செயல்பட்டு வந்தார். இன்று பவித்ரக் பிராண்டின் தயாரிப்புகள் அமேசான், ஃபிளிப்கார்ட், ரிலையன்ஸ் போன்ற முன்னணி சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சமீர் விவசாயிகளுக்கு சொல்லும் மெசேஜ்: உங்களுடைய துறை என்ன? என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். தரத்தில் கவனம் செலுத்துங்கள். தயாரிப்புகளைத் தயார் செய்யும் போது உங்கள் வாடிக்கையாளர்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யும் போது இடைத்தரர்களின் பங்களிப்பை குறைக்க முயற்சி செய்யுங்கள். குறிப்பாக பேக்கேஜிங்கிலும் கவனம் செலுத்துவது முக்கியம். உங்கள் தயாரிப்பு எந்த வகையிலும் பிறருக்கு தீங்கு விளைவிக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் நுட்பம் குறித்த நன்கு அறிந்த விவசாயிகளிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
யாருமே செய்யாத ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்ட சமீர் இன்று லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். அவருடைய விடாமுயற்சி தான் இத்தகைய வெற்றிக் கனியை அவருக்கு பெற்று தந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications