ஒவ்வொரு மாதமும் பிறக்கும்போது சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். அந்த வகையில் 2025-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. அது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் EPFO 3.0, டிடிஎஸ் காலக்கெடு என பல விஷயங்கள் இந்த 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளன.
EPFO 3.0: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்கள் யுபிஐ மற்றும் ஏடிஎம்-கள் மூலம் தங்கள் பிஎப் பணத்தை உடனடியாக எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய அம்சம் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. இதற்கு முன்னர் பணம் எடுக்கும் செயல்முறை மிகவும் சிக்கலானதாக இருந்தது. இதையடுத்து தற்போது EPFO அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு பணம் எடுக்கும் செயல்முறையை சற்று எளிதாக்கியுள்ளது. கூடுதலாக இபிஎப் உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி பேலன்ஸை யுபிஐ தளங்களின் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

வருமான வரி காலக்கெடு: படிவம் 16-ஐ வழங்குவதற்கான காலக்கெடு ஜூன் 15 ஆகும். சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு முதலாளிகளால் வழங்கப்படும் சான்றிதழ் தான் இந்த படிவம் 16. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து எவ்வளவு TDS கழிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்வதற்காக இது வழங்கப்படுகிறது.
ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல்: 2025-ஆம் ஆண்டின் ஜூன் 14-ஆம் தேதி தான் மைஆதார் போர்ட்டலில் ஆதார் விபரங்களை இலவசமாக புதுப்பிக்க அரசு வழங்கியுள்ள இறுதிக் காலக்கெடு. இந்த தேதிக்குப் பிறகு அனைத்து ஆன்லைன் புதுப்பிப்புகளுக்கும் 25 ரூபாய் அல்லது ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று புதுப்பித்தால் அதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
பிக்சட் டெபாசிட் விகிதம்: சூரியோதயா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 2025-ஆம் ஆண்டின் ஜூன் 1-ஆம் தேதி முதல் அதன் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்களைக் குறைத்திருக்கிறது. இந்த தேதியிலிருந்து ரூ.3 கோடிக்கும் கீழ் உள்ள பிக்சட் டெபாசிட்களுக்கான விகிதங்கள் 4 சதவீதம் முதல் 8.4 சதவீதம் வரை மட்டுமே இருக்கும்.
கிரெடிட் கார்டு மாற்றங்கள்:
HDFC பேங்க்: டாடா நியூ இன்பினிட்டி மற்றும் டாடா நியூ ப்ளஸ் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஜூன் 10-ஆம் தேதி முதல் இலவச விமான ஓய்வறை பயன்படுத்தும் வசதியைப் பெற முடியாது. புதிய விதிகளின்படி காலாண்டு செலவினங்களின் அடிப்படையில் தான் வவுச்சர்கள் வழங்கப்படும். அதன் மூலம் இலவச விமான நிலைய ஓய்வறையைப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படும்.
ஆக்சிஸ் பேங்க்: 2025-ஆம் ஆண்டில் ஜூன் 20-ஆம் தேதி முதல் ஆக்சிஸ் பேங்க் அதன் ரிவார்ட் புள்ளிகளில் மாற்றங்களை செய்யவுள்ளது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் உங்களுடைய கிரெடிட் கார்டில் பெறப்படும் ரிவார்ட் புள்ளிகளில் என்னென்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை வங்கியின் இணையத்தளத்தைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications