விவசாயியின் மகன்.. இன்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு ஓனர்! யார் இந்த நாமக்கல்காரர்?

விவசாயக் குடும்பத்தில் பிறந்து.. ஒரு சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கி.. அதை சர்வதேச அளவில் தடம் பதிக்க வைத்து.. இன்று கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார் ஒரு நபர். இது உண்மையிலேயே சாதாரண விஷயம் அல்ல. திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் சின்ன கிராமத்தில் இருந்து கூட சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் "யா கிரியேஷன்ஸ்". இந்நிறுவனத்தின் நிறுவனர் ஈஸ்வரன் ஆறுமுகம். இவர் நிறுவனம் தொடங்கும் போது ஒரே ஒரு நபருடன் ஆரம்பித்தார். ஆனால் இன்று யா கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் 26-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்

விவசாயியின் மகன்.. இன்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு ஓனர்! யார் இந்த நாமக்கல்காரர்?

"யுவர் ஸ்டோரி" என்ற இணையதளத்திற்கு ஆறுமுகம் அளித்த பேட்டியில் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட சுமார் 7 நாடுகளில் தனக்கு வாடிக்கையாளர்கள் இருப்பதாக குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் ரூ.1.5 கோடி மதிப்பிலான ப்ராஜெக்ட்களை வழங்கி சாதனை படைத்துள்ளது.

ஆறுமுகத்தின் இளமைக்காலம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஆறுமுகம். இவருடைய தந்தை ஒரு விவசாயி. கூடுதலாக மளிகை கடை ஒன்றையும் இவருடைய குடும்பம் நடத்தி வந்தது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பிஎஸ்சி மற்றும் எம்சிஏ பட்டம் பெற்றவர். இவருடைய சகோதரர்களும் உயர் கல்வி பயின்றுள்ளனர்.

Also Read

2011-ஆம் ஆண்டு சென்னையை தளமாக கொண்டு இயங்கி வரும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு மாதம் 3500 ரூபாய் சம்பளமாக கிடைத்தது. அங்கு 9 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு படிப்படியாக டெக்னிக்கல் லீடாக மாறினார். வாடிக்கையாளர்களின் தேவை என்ன? சொந்தமாக சாஃப்ட்வேரை உருவாக்குவது எப்படி? போன்ற பல விஷயங்களை அங்கு பணிபுரிந்த போது கற்றுக் கொண்டார். ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பினார்.

இரண்டு லேப்டாப்புகளோடு தொடங்கிய நிறுவனம்: சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற ஆறுமுகத்திற்கு ஒரு யோசனை வந்தது. சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கலாம் என்று முடிவு எடுத்தார். அவரது சகோதரர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர். ஆறுமுகத்திடம் ஏற்கனவே தொழில்நுட்பம் குறித்த அனுபவம் இருந்தது. ஆனால் தொழில் தொடங்க பணம் எதுவும் இல்லை. அப்போது அவருக்கு ஒரு சிறிய நிறுவனத்திடம் இருந்து ப்ராஜெக்ட் கிடைத்தது.

அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். இதற்காக தனது சகோதரரிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றார். மாதம் ரூ. 10,000 வாடகைக்கு ஒரு இடத்தை கண்டுபிடித்தார். அங்கு தான் 2 லேப்டாப் களுடன் யா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் நிறுவனம் தொடங்கிய போதே மாதம் ரூ.30,000 சம்பளத்திற்கு ஒரு பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை வேலைக்கு அமர்த்தினர்.

அவருக்கு கிடைத்த முதல் ப்ராஜெக்டை வைத்தே அந்தப் பெண்ணுக்கு சம்பளமும், அலுவலகத்திற்கு வாடகையும் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு எந்த ப்ராஜெக்ட்டும் வரவில்லை. நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில் 2019-இல் கோவிட் பெருந்தொற்று பரவத் தொடங்கியது.

இதனால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினார். பிப்ரவரி 2021-ஆம் ஆண்டில் தனது கிராமத்திற்கு அருகில் மீண்டும் நிறுவன செயல்பாடுகளை தொடங்கினார். சொந்த ஊரிலேயே இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தினார். ஆனால் அப்போதும் ப்ராஜெக்ட் எதுவும் வரவில்லை. இதனால் ரூ.5 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. தன் குழந்தையின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டார்.

அப்போதுதான் தனக்கு கிடைத்த சின்ன சின்ன ப்ராஜெக்ட்டையும் தட்டாமல் ஏற்றுக்கொண்டு செய்யத் தொடங்கினார். வெப்சைட் டெவலப்மென்ட், மொபைல் ஆப், சர்வே மற்றும் டிஜிட்டல் சேவை என அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்தார். இதன் பலனாக முதல் ஆண்டிலேயே 3 லட்சம் வருவாய் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 7 லட்சம், 10 லட்சம், 30 லட்சம் என நிறுவனத்தின் வருவாய் உயர்ந்தது. இன்று யா கிரியேஷன்ஸ் நிறுவனம் மலேசியா, கத்தார், ஜெர்மனி, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, உள்ளிட்ட ஏழு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல அரசு நிறுவனங்களுக்கும் இந்த நிறுவனம் பணியாற்றியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+