சினிமாவை விட்டு ரூ.3300 கோடி பிசினஸ்! 1990-களின் சாக்லேட் பாய் செய்த தரமான சம்பவம்! யார் இவர்?

1990-களின் சாக்லேட் பாயாக திகழ்ந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகர்களில் இவரும் ஒருவர். ரோஜா, பம்பாய் போன்ற திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுக்க தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இப்படி விரைவாக உச்சத்தை தொட்ட அரவிந்த்சாமி, தனது 30-ஆம் வயதிற்குள் திரைத்துறையில் இருந்து விலகினார். இன்று சில ரோல்களில் மட்டும் நடித்து வந்தாலும், நம்மில் பலருக்குத் தெரியாத தொழிலதிபராக மாறியுள்ளார்.

மிகவும் இளம் வயதிலேயே திரையில் தோன்றியவர் அரவிந்த்சாமி. தனது 20-வது வயதில் மணிரத்தினம் இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு வெளியான தளபதி படத்தின் மூலம் இந்திய திரைத்துறையில் அறிமுகமானார். ரஜினிகாந்த், மம்முட்டி போன்றோரும் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

பின்னர் 1922-ஆம் ஆண்டில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' திரைப்படம் தான் அரவிந்த்சாமிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அன்றைய காதலர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக ரோஜா உருவெடுத்தது. ரோஜா ஒரு காதல் திரில்லர் திரைப்படம் என்பதால் மாபெரும் வெற்றியடைந்து, இந்தியத் திரைத்துறையில் அரவிந்த்சாமியை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது. பின்னர் 1995 ஆம் ஆண்டிலும் மணிரத்தினத்தின் மற்றொரு இயக்கமான பாம்பே திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடித்தார்.

சினிமாவை விட்டு ரூ.3300 கோடி பிசினஸ்! 1990-களின் சாக்லேட் பாய் செய்த தரமான சம்பவம்! யார் இவர்?

தொடர்ந்து வெற்றி படங்களைக் கொடுத்த அரவிந்த்சாமிக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையும் பெருமளவில் உதவியது. இதில் அடுத்தடுத்து வெளியான மின்சார கனவு மற்றும் ஹிந்தியில் வெளியிடப்பட்ட சப்னே போன்ற திரைப்படங்கள் அவரை அடுத்தடுத்த உயரத்திற்கு அழைத்துச் சென்றது.

பாலிவுட் அறிமுகம்: 1998-ஆம் ஆண்டு ஜூஹி சாவ்லாவுடன் இணைந்து பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் 1990-களின் இறுதியில் இருந்து திரைப்படங்களின் நடிப்பதை குறைக்க தொடங்கினார். சில படங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. அமிதாபச்சன் மற்றும் அனுபம் கேர் போன்ற முன்னணி பிரபலங்களுடன் அவர் இணைந்து நடிக்கவிருந்த சில ப்ராஜெக்ட்களும் தள்ளிப்போயின. அதன் பிறகு 2000-ஆம் ஆண்டில் அலைபாயுதே திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதோடு சரி அதன் பிறகு அரவிந்த்சாமி திரையுலகை விட்டு முற்றிலுமாக விளங்கினார்.

2005-ஆம் ஆண்டில் அரவிந்த்சாமிக்கு ஏற்பட்ட விபத்தில், அவருடைய முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது. இதனால் ஒரு கால்பகுதி மட்டும் பேரலைஸ் ஆனது. இதன் காரணமாக இரண்டு ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்தார். அதிலிருந்து மீண்டு நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார். இதைத்தொடர்ந்து பல ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார்.

அதன் பின்னர் 13 ஆண்டுகள் கழித்து இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் வற்புறுத்தலால் 2013-ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தின் மூலம் அரவிந்த்சாமி மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். பின்னர் 2015 ஆம் ஆண்டில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. அந்த திரைப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற பெயரில் வில்லன் ரோலில் நடித்திருப்பார். இது அவருடைய ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்று தந்தது.

திரை நட்சத்திரம் டூ தொழிலதிபர்: சினிமாவுக்கு பிறகு அரவிந்த்சாமி தனது குடும்பத் தொழிலை கண்காணிக்க தொடங்கினார். வி.டி. சுவாமி & கம்பெனி மற்றும் இன்டர்ப்ரோ குளோபல் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் பேரோல் ப்ராசசிங் மற்றும் மற்றும் ஒர்க் ஃபோர்ஸ் மேனேஜ்மென்ட் வழங்கும் டேலண்ட் மேக்சிமஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இன்றளவும் இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக அரவிந்த்சாமி இருக்கிறார்.

ஒரு சில தளங்கள் நிறுவனங்களின் சொத்து மதிப்பை கண்காணித்து அவ்வப்போது அறிக்கைகளாக வெளியிடும். அது போன்ற தளங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, டேலண்ட் மேக்சிமஸ் நிறுவனம் 2020-ஆம் ஆண்டிலேயே சுமார் 418 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியதாக தெரியவந்தது. அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 3300 கோடி ரூபாய். இது அரவிந்த் சுவாமியின் சொத்து மதிப்பல்ல. நிறுவனத்தின் வருவாய் மட்டுமே. விபத்து ஏற்பட்ட போதிலும் அதிலிருந்து மீண்டு வந்து இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். இவர் உண்மையிலேயே பலருக்கும் ஒரு சிறந்த உதாரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+