ஷாருக்கான் சல்மான் கானை மிஞ்சிய பாலிவுட் குடும்பம்.. பழ வியாபாரம் டூ ரூ.10,000 கோடி சொத்து மதிப்பு!

பல பாலிவுட் பிரபலங்கள் தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து திரைத்துறையில் நடித்து வருகின்றனர். அதிலும் சில குடும்பங்கள் தங்களுக்கு சொந்தமாக ஸ்டூடியோக்கள், படத் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றை வைத்திருக்கின்றனர். இப்படி குடும்பமாக சேர்ந்து வளர்ச்சி அடைந்திருக்கும் சிலரின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு காலத்தில் பழ வியாபாரம் செய்த குடும்பம் இன்று பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

பாலிவுட்டின் பணக்கார குடும்பம்: ஹூருன் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இந்தியாவின் பிரபல பணக்காரர்களான கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் பெயரும் இந்தப் பட்டியலில் இருந்தது. இவர்களோடு திரை துறையைச் சேர்ந்த பல பிரபலங்களின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றது. அதில் T சீரிஸ் குழும நிறுவனங்களின் உரிமையாளரான பூஷன் குமாரின் குடும்பம் இடம் பெற்றிருந்தது. அறிக்கையின் படி இவருடைய குடும்பத்தின் சொத்து மதிப்பு $1.2 பில்லியன். அதாவது இந்திய மதிப்புக்கு ரூ.10,000 கோடி ரூபாய்.

ஷாருக்கான் சல்மான் கானை மிஞ்சிய பாலிவுட் குடும்பம்.. பழ வியாபாரம் டூ ரூ.10,000 கோடி சொத்து மதிப்பு!

90-களின் பிற்பகுதியில் கேசட் விற்பனை நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று பாலிவுடில் T சீரிஸ் என்ற பெயரில் கோடி கட்டிப் பறக்கிறது. குல்ஷன் குமாரின் மறைவுக்குப் பிறகு T சீரிஸ் நிறுவனத்தின் முழு பொறுப்பையும் அவருடைய மகனான பூஷன் குமார் எடுத்துக் கொண்டார். "ஆஷிக்கி" படத்தின் மூலம் T சீரிஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பைத் தொடங்கியது. அதிலிருந்து பல வெற்றி படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் பிஆர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருக்கும் சோப்ரா குடும்பம், பூஷன் குமார் குடும்பத்திற்கு முன்பிலிருந்து பல ஆண்டுகளாக பாலிவுட்டில் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருந்து வந்தது. ஆதித்ய சோப்ராவின் கடின உழைப்பு காரணமாக சோப்ரா குடும்பத்தின் நிகர மதிப்பு ரூ.8000 கோடிக்கு மேல் உள்ளது. அதேபோல ஷாருக்கானின் குடும்பமும் ரூ.7500 கோடி மதிப்புடையதாக உள்ளது. இந்த மதிப்பை தற்போது பூஷன் குமாரின் குடும்பம் விஞ்சியுள்ளது.

வெளியான பணக்காரர்களின் பட்டியலில் பூஷன் குமாரின் குடும்பத்தினருடைய தனிப்பட்ட சொத்து விவரங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த குடும்பத்திற்கு சொந்தமான செல்வத்தில் ஐந்தில் நான்கு பங்கு பூஷனிடம் இருந்து மட்டுமே வருகிறது என்று தொழில் துறையினர் மதிப்பிட்டுள்ளனர். பூஷனின் சகோதரிகளான துளசிக்குமார் மற்றும் குஷாலி குமார் ஆகியோர் 250 கோடி மற்றும் 100 கோடி மதிப்புடையவர்கள் என பல்வேறு ஆதாரங்களில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கிறது. T சீரிஸ் இணை உரிமையாளரான கிஷன் குமார் மீதமுள்ள செல்வத்திற்கு பங்களிப்பு செய்கிறார்.

ஆனால் அவர்களுடைய வளர்ச்சி அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் பூஷனின் தந்தையான குல்ஷான் குமார் டெல்லியில் பழ வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் 70-களில் கேசட்டுகளை விற்கும் கடையை பூஷனும் அவருடைய தந்தையும் வாங்கிய பிறகு தான் பூஷன் குடும்பத்தின் வாழ்க்கை மாறத் தொடங்கியது.

அப்படியே படிப்படியாக டி சீரிஸாக வளர்ந்த சூப்பர் கேசட் என்ற நிறுவனம் மாபெரும் திரைப்பட ஸ்டூடியோவாக உள்ளது. நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் டி சிரிஸ் நிறுவனமும் ஒன்று. மேலும் பல துணை நிறுவனங்கள் மற்றும் நொய்டாவில் ஒரு நடிப்புப் பள்ளியும் பூஷன் குடும்பத்திற்கு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+