டெல்லி: பொருளாதார அடிப்படையிலும் ராணுவ பலத்தின் அடிப்படையிலும் இந்தியா பாகிஸ்தானை விட பல மடங்கு முன்னிலையில் தான் இருக்கிறது. 1947ஆம் ஆண்டு தான் இரண்டு நாடுகளுமே பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாக உதயமாகின.
இத்தனை ஆண்டுகளில் இந்தியா பிரமிக்க தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானோ வளர்ச்சி பாதையை விட்டு விலகி அதன் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மக்களின் மீதும் நாட்டின் வளர்ச்சி மீதும் கவனம் செலுத்தாமல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதே இதற்கு காரணம். பாகிஸ்தானில் இந்த செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்துள்ளது.

1975 ஆம் ஆண்டு பாகிஸ்தானை விட இந்தியாவின் பொருளாதாரம் 9 மடங்கு அதிகமாகவே இருந்தது. ஆனால் 1975 இல் இருந்து 2000 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் இந்த இடைவெளியை பூர்த்தி செய்து வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியது.
2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்தியாவின் பொருளாதாரம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதே வேளையில் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது. இந்தியா 1991ஆம் ஆண்டு பொருளாதார சீர்த்திருத்தங்களை தொடர்ந்து வேகமாக வளர்ச்சியை காண தொடங்கியது. உற்பத்தி, சேவை என பல துறைகளும் வளர தொடங்கின. இதன் மூலம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவாகி இருக்கிறது.
2000ஆம் ஆண்டு பாகிஸ்தானின் தனிநபர் வருமானம் 733 டாலர்களாக இருந்தது இந்தியாவில் அப்போது வெறும் 442 டாலர்களாக மட்டுமே இருந்தது . ஆனால் இதன் பிறகுதான் இந்தியாவின் வளர்ச்சி வேகமெடுத்தது. 2014 ஆம் ஆண்டில் 1560 டாலர்களாக இருந்த இந்தியாவின் தனிநபர் வருமானம் 2024 ஆம் ஆண்டில் 2711 டாலர்களாக உயர்ந்தது. பத்து ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் வருமானம் 24 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
பாகிஸ்தானை பொறுத்தவரை 2014 ஆம் ஆண்டு அந்த நாட்டில் தனி நபர் வருமானம் 1474 டாலர்களாக இருந்து 2024ஆம் ஆண்டில் 1581 டாலர்களாக 11 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. 2000 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி 468 பில்லியன் டாலர்களாக இருந்தது. பாகிஸ்தானின் ஜிடிபி 99 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 3909 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. அதே வேளையில் பாகிஸ்தான் ஜிடிபி 373 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருக்கிறது. வேலை வாய்ப்பின்மை விகிதம் என வரும்போது 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9 சதவீதமாக இருக்கிறது, பாகிஸ்தானில் 8 சதவீதமாக உள்ளது.
2024 ஆம் ஆண்டு இந்தியாவின் பணவீக்க விகிதம் 4.7 சதவீதமாக இருந்தது, பாகிஸ்தானின் பணவீக்க விகிதம் 23.4 சதவீதமாக இருக்கிறது. பொருளாதாரம், தனிநபர் வருமானம், ஜிடிபி ஆகிய அனைத்து குறியீடுகளிலும் இந்தியா பாகிஸ்தானால் எட்டி கூட பார்க்க முடியாத உயரத்தில் தான் இருக்கிறது. ராணுவ பலம், உலக நாடுகள் உடனான நட்பு, வர்த்தகம் ஆகியவற்றிலும் கூட இந்தியா தான் உயர்ந்து நிற்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications