Ghibli முதல் Nano Banana வரை: வைரல் AI டிரெண்டுக்கு பின்னால் இருப்பது யார்? அதிர்ச்சியூட்டும் உண்மை

2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏஐ சம்பந்தப்பட்ட இரண்டு விஷயங்கள் சமூக வலைத்தளங்களை ஆட்டிப்படைத்துள்ளன. ஒன்று கிப்ளி (Ghibli) ஏஐ புகைப்படங்கள் மற்றொன்று நானோ பனானா (Nano Banana) ஏஐ புகைப்படங்கள். லட்சக்கணக்கான மக்கள் இந்த ஏஐ டிரெண்டில் இணைந்து தங்களுடைய புகைப்படங்களை உள்ளீடு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

ரெட்ரோ புகைப்படங்கள்: தற்போது கூகுளின் நானோ பனானா ஏஐ படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. குறிப்பாக ரெட்ரோ ஸ்டைல் புடவை படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடாத நபர்ளே இல்லை எனக் கூறும் அளவிற்கு இந்தியாவில் பெரிய அளவில் ட்ரெண்டான ஒரு விஷயமாக மாறி இருக்கின்றன . போட்டோ ஷூட் செய்து கொள்ள முடியாது என்பவர்கள் எல்லாம் தங்களுடைய புகைப்படங்களை உள்ளீடு செய்து இப்படி புகைப்படங்களாக மாற்றி ரசித்துக்கொண்டிருக்கிறார்கள், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Ghibli முதல் Nano Banana வரை: வைரல் AI டிரெண்டுக்கு பின்னால் இருப்பது யார்? அதிர்ச்சியூட்டும் உண்மை

எங்கு பார்த்தாலும் ஏஐ படங்கள்: இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என எங்கு பார்த்தாலும் இந்த புகைப்படங்கள் தான் காட்சி தருகின்றன. ஒரு கட்டத்தில் நமக்கே சலிப்பை கூட இது ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி ஏஐ டிரெண்டுகள் உருவாகின்றன, யார் இதனை உருவாக்குகிறார்கள், இதனால் யாருக்கும் லாபம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கிப்ளி டிரெண்ட்: ஓபன் ஏஐ நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தி சாட்ஜிபிடி4.0 மாடலை வெளியிட்டது . இது ஒரு நவீன இமேஜ் ஜெனரேஷன் மாடல் என்பதால் பெரும்பாலானவர்கள் இதனை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கிப்ளி டிரெண்ட் படங்கள் என்ற ஒரு டிரெண்டை கொண்டு வந்தது. நம்முடைய புகைப்படத்தை உள்ளீடு செய்தால் அது ஜிப்ளி அனிமேஷன் வடிவத்தில் உருவாக்கி தரும். இத்தனை காலம் கற்பனையாகவே இதை பார்த்துக் கொண்டிருந்த நெட்டிசன்கள் உடனடியாக தங்களுடைய புகைப்படங்களை கிப்ளி டிரெண்டு படங்களாக மாற்றி சமூக வலைத்தளங்களில் பகிர தொடங்கினர்.

சாட் ஜிபிடி: கிப்ளி பயன்பாட்டுக்கு வந்து சில நாட்களிலேயே 700 மில்லியன் கிப்ளி ஸ்டைல் படங்கள் சாட் ஜிபிடி மூலம் உருவாக்கப்பட்டன, 13 மில்லியன் பயனாளர்கள் இந்த டிரெண்டை பயன்படுத்தி கிப்ளி படங்களின் உருவாக்கித் தள்ளினர். இதனால் ஓபன் ஏஐ சர்வர்கள் இயக்கத்திலேயே தடை ஏற்பட்டது. இதனை அடுத்து கிப்ளி படங்களை உருவாக்குவதற்கு கட்டுப்பாடுகளை ஓபன் ஏஐ நிறுவனம் கொண்டு வந்தது. பின்னர் படிப்படியாக இந்த டிரெண்ட் மறைந்தது .

Ghibli முதல் Nano Banana வரை: வைரல் AI டிரெண்டுக்கு பின்னால் இருப்பது யார்? அதிர்ச்சியூட்டும் உண்மை

நானோ பனானா டிரெண்ட்: தற்போது கூகுளின் நானோ பனானா சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது. குறிப்பாக இந்தியாவில் இதனை பயன்படுத்தாத நெட்டிசன்களே இல்லை என்ற சூழல் உண்டாகி இருக்கிறது . வயது வித்தியாசம் இன்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த நானோ பனானா டிரெண்டில் தங்களுடைய புகைப்படங்களை உள்ளீடு செய்து ஹைப்பர் ரியலிஸ்டிக் 3d ஃபிகரின்களையும், ரெட்ரோ ஹீரோ ஹீரோயின்களை போலவும் புகைப்படங்களாக உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

எளிமையே காரணம்: இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவு தேவையில்லை சிம்பிளாக ஒரு பிராண்டை உள்ளீடு செய்து போட்டோவை அப்லோட் செய்தாலே போதும். நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்னும் அழகாக மாற்றி உங்கள் படத்தை தந்து விடும். இந்த எளிமை தான் மிக வேகமாக இந்த டிரெண்ட் பரவுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. புதிதாக பத்து மில்லியன் பேர் இந்த நானோ பனானா செயலியை பதிவிறக்கம் செய்திருக்கிறார்களாம் ஒரு வாரத்திலேயே 200 மில்லியனுக்கும் அதிகமான படங்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கற்பனைக்கு வடிவம்: சாதாரண மக்களை பொருத்தவரை தங்களுடைய கற்பனைக்கு ஒரு வடிவம் கொடுப்பதாகவே இந்த டிரெண்டுகளை பார்க்கின்றனர். இது அவர்களை அழகு படுத்தி பார்ப்பதற்கு மிக எளிமையான ஒரு வாய்ப்பினை தந்திருக்கிறது . இணைய தொடர்பும் ஒரு பிராம்ப்டும் இருந்தாலே போதும் .ஆனால் இதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை நாம் தெரிந்து கொள்ள தவறுகிறோம் .

ஏஐ டிரெண்டில் யாருக்கு லாபம்: எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் ஆர்வ மிகுதியில் நம்முடைய தனிப்பட்ட புகைப்படங்களை எளிதாக ஏஐ வசம் நாம் ஒப்படைத்து வருகிறோம். இந்த டிரெண்டுகள் ஏஐ செயலிகள் நம் தொடர்பான தரவுகளை சேகரிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன . இந்த டிரெண்டுகள் மூலம் லாபம் அடைவது சாட் ஜிபிடியும் கூகுளும் தான். இதன் மூலம் இந்த செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிறது.

Ghibli முதல் Nano Banana வரை: வைரல் AI டிரெண்டுக்கு பின்னால் இருப்பது யார்? அதிர்ச்சியூட்டும் உண்மை

தரவுகளை கொடுக்கிறோம்: இந்த டிரெண்டுகள் வந்த வேகத்திலேயே மறைந்துவிடும் ஆனால் இதன் மூலம் ஏஐ செயலிகளுக்கு நாம் தரக்கூடிய தரவுகள் அவற்றில் எப்பொழுதுமே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் . அண்மையில் கூட ஒரு பெண் நானோ பனானாவில் நான் கைகளை மூடி இருந்த ஆடை அணிந்த புகைப்படத்தை தான் பதிவேற்றம் செய்திருந்தேன் , இருந்தாலும் அது சேலை புகைப்படத்தில் என்னுடைய கையில் இருந்த மச்சத்தை தெளிவாக காட்டியது இதனை கண்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன் என பதிவிட்டு இருந்தார் .

சைபர் குற்றவாளிகளுக்கு சோர்ஸ்: எனவே நம்முடைய தரவுகள் எந்த அளவிற்கு எவ்வளவு துல்லியமாக ஏஐ வசம் செல்கின்றன என்பதற்கு இதுவே முக்கியமான சான்று. இப்படி இணையத்தில் நம்முடைய படங்கள் பிரபலமாகிக் கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும் இது சைபர் குற்றவாளிகளுக்கான ஒரு சோர்ஸாக மாறிவிடும் என்ற எச்சரிக்கையும் விடப்படுகிறது. விளையாட்டாக நாம் நம்முடைய படங்களை பதிவேற்றம் செய்து விபரீதத்தில் சிக்கி கொள்ள கூடாது.

தவறான படங்கள்: ஏனெனில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நம் புகைப்படங்களை தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த நானோ தொழில்நுட்பத்தில் யாருடைய புகைப்படத்தை வேண்டுமானாலும் நாம் பதிவு செய்து அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதுதான் பெரிய கலக்கத்தை ஏற்படுத்துகிறது .

கவனம் அவசியம்: ஒரு நபரின் புகைப்படத்தை பதிவிட்டு இவர் மது அருந்துவது போல ஒரு படத்தை உருவாக்கு எனக் கூறினால் ஏஐ செயலிகள் உடனடியாக உருவாக்கி தருகிறது. இதுவே இந்த தொழில்நுட்பம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் நமக்கு கூறுகிறது. அரசு இதுபோன்ற ஏஐ இமேஜ் உருவாக்கங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதோ என்ற கேள்வியையும் இது வலுவாக எழுப்புகிறது . எனவே ஏஐ டிரெண்டில் நம் தகவல்களையும் படங்களையும் பகிரும் போது கவனமாக இருப்பது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+