இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து துபாயில் பணக்காரராக வலம் வரும் ஒருவரை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். அவருடைய நிகர மதிப்பை கேட்டால் தலையே சுற்றும். அந்த அளவிற்கு தன் உழைப்பினால் உயர்ந்த ஒரு மனிதர் தான் யூசுப் அலி. யூசுப் அலி முசாலியம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரர் ஆவார்.
யூசுப் அலி லூலு குரூப் இன்டர்நேஷனலின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்நிறுவனம் 7.4 அமெரிக்க பில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறது. ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலின்படி, 2023-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் யூசுப் அலியின் நிகர மதிப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவர் இந்தியாவின் 27-வது பணக்காரராக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.

இளமைப் பருவம்: திருச்சூரில் உள்ள நாட்டிகாவை பூர்வீகமாக கொண்ட யூசுப் பலி 1955-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி பிறந்தார். தனது பள்ளி படிப்பை திருச்சூர் கரஞ்சிராவில் உள்ள சயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். அதன் பிறகு பிசினஸ் மேனேஜ்மென்ட் அட்மினிஸ்ட்ரேஷனில் டிப்ளமோ பட்டம் பெற்றார். தனது கல்வியை முடித்த பிறகு வேலை பார்ப்பதற்காக அபுதாபி சென்றார்.
அங்கு அவருடைய தந்தை வழி மாமாவின் வணிகத்தை மேற்பார்வையிடத் தொடங்கினார். யூசுப் அலி இறக்குமதி மற்றும் மொத்த விநியோகத்திற்கு பொறுப்பேற்று வணிகத்தை திறம்பட நடத்திக் கொண்டிருந்தார். அதன் பிறகு 1990-களில் லூலூ ஹைபர் மார்க்கெட்டை தொடங்கி பல்பொருள் வணிகத்தில் நுழைந்தார்.
யூசுப் அலியின் வணிக ஆர்வத்தின் காரணமாக தற்போது லூலு குழுமம் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. கேரளாவின் கொச்சியில் 2013-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி லூலூ சர்வதேச ஷாப்பிங் மால் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இன்று இந்த வணிகம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு 2018-ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. அப்போது இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு சென்று வணிகம் செய்யும் 100 இந்தியர்களில் யூசுப் அலி தான் முதலிடத்தில் இருந்தார்.
சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது ஒரு குடும்பம் வீட்டை இழந்து தவித்தது. அப்போது அவர்களின் கடனை ஏற்று கட்டி அவர்களுக்கு வீட்டை மீட்டு தந்தார். பெரும்பாலான நேரங்களில் தனது எளிமையான நடத்தையின் காரணமாக யூசுப் அலி பேசப்படுவார். இவ்வளவு பணம் இருந்தும் எளிமையான குணம், பிறரை மதிக்கும் தன்மை ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து தனக்கென ஒரு ஃபேன் பேஸை உருவாக்கி வருகிறார். இவரை பின்பற்றும் பலர் நம் நாட்டில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications