ஈரானில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு போர் தீவிரமடைய போகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ஈரான், எதிரிகள் சரணடையும் வரை நாங்கள் போரை தொடர்வோம் என அறிவித்துள்ளது.
ஈரான் போர் ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் கடுமையான பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயர்வு கண்டிருக்கிறது. பிலிப்பைன்ஸில் எனர்ஜி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இத்தகைய சூழலில் இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைக்கு பெட்ரோல் டீசலுக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் இல்லை. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்ந்தியுள்ளன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் இதுவரை கை வைக்கவில்லை.

எல்பிஜி பொறுத்தவரை வணிகப் பயன்பாட்டை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது, வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை பெருமளவில் உயர்த்தப்படவில்லை. அதே வேளையில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு தான் எண்ணெய் நிறுவனங்கள் முன்னுரிமை தந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது ஈரான் போர் நேரடியாக சாமானிய மக்களை பாதிக்க கூடாது என்பதில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மிக கவனமாக எடுத்து வருகிறது. ஆனால் உண்மையான பிரச்சனையே இனிமேல் தான் தொடங்கப் போகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு , அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய இரண்டும் இந்தியாவில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தும் என நுவாமா நிறுவனம் கூறி இருக்கிறது. குறிப்பாக புதிய நிதியாண்டு தொடங்கி இருக்கக்கூடிய சூழலில் அடுத்து வரக்கூடிய சில வாரங்களிலேயே இந்தியாவில் எஃப்எம்சிஜி நிறுவனங்கள் பல்வேறு பொருட்களின் விலைகளை உயர்த்தப் போகின்றன என தெரிவித்திருக்கிறது.
அதாவது பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் பல்வேறு பொருட்களின் விலைவாசி மூன்றிலிருந்து நான்கு சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. சமையல் எண்ணெய், சோப்பு மற்றும் டிடர்ஜென்ட், பெயிண்ட் ஆகியவற்றின் விலை பெருமளவில் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது. இந்த பொருட்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதும் பேக்கேஜிங் கட்டணம் உயர்ந்திருப்பதுமே இதற்கு காரணம் என நுவாமா நிறுவனம் கூறியிருக்கிறது.

பல்வேறு பொருட்களின் உற்பத்தி செலவு 20% வரை உயர்வு கண்டிருப்பதால் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை மக்களின் மீது சுமத்த தயாராகி இருப்பதாக நுவாமா நிறுவனம் கூறுகிறது. ஆசியன் பெயிண்ட்ஸ், பெர்கர் பெயிண்ட்ஸ், டாபர், இமாமி போன்ற நிறுவனங்கள் தங்கள் பிராண்ட் பொருட்கள் விலையை இந்த மாத மத்தியிலேயே உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு புறம் இருக்க ஈரான் போர் இந்தியாவின் இண்டர்நெட் இணைப்புக்கும் பிரச்சினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. டிஜிட்டல் ரீதியிலான இணைப்புக்கு கடலுக்கு அடியில் போடப்பட்டு இருக்கக்கூடிய கேபிள் இணைப்புகள் தான் முக்கியம். சர்வதேச அளவிலான 99% இண்டர்நெட் டிராபிக் இந்த கேபிள்கள் மூலம் தான் கிடைக்கிறது. தற்போதைக்கு ஈரான் இந்த கேபிள் உள்கட்டமைப்புகள் மீது எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் எதிர் வரக்கூடிய நாட்களில் இன்டர்நெட் இணைப்பு கேபில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் இந்தியாவில் பெரும் அளவில் இன்டர்நெட் முடங்கும் அபாயம் ஏற்படலாம்.
செங்கடல் வழியாக வரக்கூடிய கேபிள்கள் சேதமடைந்தால் அதனை சரி செய்வதற்கு ஓராண்டு காலம் தேவைப்படும் என சொல்லப்படுகிறது. உடனடியாக பெரிய அளவில் இண்டர்நெட் முடக்கம் இல்லை என்றாலும் இண்டர்நெட் இணைப்பு தாமதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

பெட்ரோல் விலை ரூ.119, டீசல் விலை ரூ.127..!! இந்த மாத கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கு மக்களே!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications