சென்னை: இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயணத்தில் ரயில்கள் முக்கிய பங்கு வைக்கின்றன. குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரம் செல்ல முடியும் என்பதால் லட்சக்கணக்கானவர்கள் அதிக அளவில் விரும்பி ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் , விடுமுறை நாட்கள் என்றால் ரயில் டிக்கெட்டே கிடையாது என்ற அளவுக்கு முன்கூட்டியே டிக்கெட் முன் பதிவு செய்து விடுவார்கள்.
ரயில்களில் ஏசி பெட்டி, சாதாரண வகுப்புகள், இருக்கை மட்டுமே கொண்ட வகுப்புகள் என பல வகைகள் உள்ளன. இதில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு போர்வை ,ஒரு தலையணை மற்றும் இரண்டு படுக்கை விரிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது . ஆனால் ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு இவை வழங்கப்படுவது கிடையாது.

தெற்கு ரயில்வே முன்னோடி திட்டமாக ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இந்த வசதிகள் கிடைக்கும் வகையில் அட்டகாசமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏசி வசதி இல்லாத ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கும் படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த படுக்கை விரிப்பு வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே பொறுத்தவரை இது ஒரு முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது . பயணிகள் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு படுக்கை விரிப்பு வசதி வேண்டுமென்றால் அதனை தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது உரிய கட்டணம் செலுத்தி படுக்கையை விரிப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

படுக்கை விரிப்பு மற்றும் தலையணைக்கு 50 ரூபாய் கட்டணம், தலையணைக்கு மட்டும் 30 ரூபாய் கட்டணம், படுக்கை விரிப்பு மட்டும் வேண்டும் என்றால் 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் தெற்கு ரயில்வேவிற்கு ஆண்டுக்கு 28.27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக 10 ரயில்களில் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த ரயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
ஜனவரி 1ஆம் தேதி முதல் நீலகிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மங்களூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் , திருச்செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் , சிலம்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தாம்பரம் நாகர்கோயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆலப்புலா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் உள்ள ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு இந்த படுக்கை விரிப்பு வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்காக ஒரு ஒப்பந்ததாரரை நியமனம் செய்து படுக்கை விரிப்புகளை கொள்முதல் செய்வது ,அவற்றை சுத்தம் செய்வது ,பேக்கிங் செய்வது ,ரயிலில் ஏற்றி வினியோகம் செய்வது ஆகிய அனைத்து பணிகளும் ஒப்படைக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications